உள்ளடக்கத்துக்குச் செல்

திருக்குறள்அகரமுதலி உகரவரிசை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பார்க்க:

திருக்குறள்
திருவள்ளுவமாலை
திருக்குறள் முதற்குறிப்பு அகரமுதலி
திருக்குறள் கடைச்சொல் அகரமுதலி



திருக்குறள் அகரமுதலி உகரவரிசை

[தொகு]

உகரம்

[தொகு]
=புறம்

குறள் 620

உகாஅமை
=உமிழாமல், வெளிப்படுத்தாமல்

குறள் 585

உக்க
=சிந்திய

குறள் 720

உக்கக்கால்
=இறந்தபோது

குறள் 1270.


உஞற்று
=முயற்சி

குறள் 604, 607

உஞற்றுபவர்
=(இடைவிடாமல்)முயல்பவர்

குறள் 620.

உஞற்றுபவர்க்கு
=முயல்பவருக்கு

குறள் 1024.

உடம்பாடு

[தொகு]
உடம்பாடு
=ஒப்புதல், மனம்பொருந்துதல்

குறள் 890.

உடம்பின்
=உடம்புடன்

குறள் 330.

உடம்பின்
=உடம்பினின்றும், உடம்புடன்

குறள் 330.

உடம்பினகத்து
=உடம்பின்கண்

குறள் 1163.

உடம்பினுள்
=உடம்புகளுள்

குறள் 340

உடம்பு
=யாக்கை, உடல்

குறள் 943, 1029, 1132;

=யாக்கைகள்

குறள் 80, 345, 627.

உடம்பொடு
=உடம்புடன்

குறள் 1122.

உடம்போடு
=உடம்புடன்

குறள் 33.

உடல்
=உடம்பு, யாக்கை, மெய்

குறள் 253.

உடற்கு
=மெய்க்கு

குறள் 65.

உடற்றுபவர்
=முடியாதாக நடிப்பவர்,
(ஒருசெயலை) முடியாமல்செய்பவர்

குறள் 818.

உடற்றும்
=வருத்தும்

குறள் 13.

உடன்
=ஒருங்கே, ஓடு(மூன்றாம் வே.உருபு)

குறள் 309, 589, 632, 890.

உடன்று
= வெகுண்டு, கோபித்து, சினந்து

குறள்

உடுக்கை
= உடை, ஆடை

குறள் 788.

உடுப்பது
= உடுத்திக்கொள்வது

குறள் 166, 1079.




உடை
= உடுக்கப்படுவது

குறள் 939, 1012;

= உடைய, உடைமையாகப் பூண்ட

குறள் 62, 389, 415, 473,

907, 1010, 1034.
உடைக்கும்
= 1.முறிக்கும்

குறள் 1251;

= 2.உடைக்கும்படி, நெரிக்க

குறள் 1077;

= 3.கெடுக்கும், அழிக்கும்

குறள் 1258, 1324.

உடைத்தாயின்
= உடையதானால், மேற்கொண்டால்

குறள் 44, 45.

உடைத்து
= உரிமையாகக்கொண்டது, உடையது.

குறள் 48, 112, 126, 220, 221, 277,

336, 353, 398, 458, 459, 565, 578,
611, 624, 667, 746, 770, 780, 868,
907, 925, 1010, 1018, 1053, 1057,
1082, 1085, 1152, 1173, 1275, 1276
1280, 1325.
உடைந்தது
=அழிந்துவிட்டது,
குறள் 1088.
உடைந்து
=முறிந்து,
குறள் 1270.
உடைமை
=உரிமை,
குறள் 68,74,133,154,228,344,383,558,592,
681,688,838,960,991,992,1012,1014;
=உடையராதல்,
குறள் 641;
அன்புடைமை, அதி.8,
அடக்கமுடைமை, அதி.13,
ஒழுக்கமுடைமை, அதி.14,
பொறையுடைமை, அதி.16,
அருளுடைமை, அதி.25,
ஊக்கமுடைமை, அதி.60,
ஆள்வினையுடைமை, அதி.62,
அறிவுடைமை, அதி.43,
பண்புடைமை, அதி.100,
நாணுடைமை, அதி.102.
உடைமையுள்

=பொருளுடைய காலத்தில்,

குறள் 89.
உடைய

=உரிமையாகக் கொண்டவை,

குறள் 41,975,1299,1300;

=உடையவை,

குறள் 200.
உடையது

=உடைமையாகக்கொண்டது,

குறள் 384,591,742,746,1021.
உடையம்

=பெற்றுள்ளோம்,

குறள் 844.
உடையர்

=பெற்றுள்ளார்,

குறள் 159,1072;

=பெற்றுள்ளவர்,

குறள் 285,393,458,591,900.
உடையரேனும்

=உடையராயினும்,

குறள் 430.
உடையவர்

=உடையராயினவர்/பெற்றுள்ளவர்,

குறள் 975.
உடையவர்க்கு

=பெற்றுள்ளவர்க்கு,

குறள் 139.
உடையவன்

=பெற்றுள்ளவன்,

குறள் 112.
உடையள்

=உடையவள்,

குறள் 51.
உடையன்

=உடையவன்,

குறள் 95.
உடையாட்கு

=உடையளாயவளுக்கு/பெற்றுள்ளவளுக்கு,

குறள் 1089.
உடையார்

=உடைமையாகக்கொண்டவர்,

குறள் 72, 179,195,404,413,415,427,
441,463,526,577,593,606,816,970,994,996;

=உடைமையாகக்கொண்டார்

குறள் 430;

=செல்வர்,

குறள் 395.
உடையார்கண்

=உடையாரிடத்தில்,

குறள் 1153.
உடையார்க்கு

=உடையவருக்கு,

குறள் 165,262,534,636,910.
உடையார்முன்

=உடையார்முன்னால்,

குறள் 718.
உடையாளர்

=உடைய மக்கள்,

குறள் 783.
உடையாளன்

=உடையஅரசன்,

குறள் 874.
உடையான்

=உடைமையாகக்கொண்டவன்/பெற்றுள்ளவன்,

குறள் 219,381,390,486,502,513,519,594,622,684.
உடையானை

=உரிமைபூண்டவனை,

குறள் 167.
உடையான்கண்

=உரிமைபூண்டவனிடத்தில்,

குறள் 135,216,223.
உடையேம்

=அடைந்துள்ளோம்/பெற்றுள்ளோம்,

குறள் 1250.
உடையேன்

=உடைத்தாயிருக்கிறேன்,

குறள் 1133;

=உடைத்தாயிருக்கிற நான்,

குறள் 1254.
உட்கப்படாஅர்

=அஞ்சப்படார்,

குறள் 921.
உட்கும்

=அஞ்சுதற்குக்காரணமாகிய,

குறள் 1088.

உண்

[தொகு]
உண்

=உண்ட,

குறள் 1091,1113,1172,1174,1212,1271.
உணக்கின்

=காயவிட்டால்,

குறள் 1037.
உணங்க

=மெலியாநிற்கவும்,

குறள் 1310.
உணர

=அறியும்வண்ணம்,

குறள் 650.
உணரப்படும்

=அறியப்படும்,

குறள் 575,826,1096.
உணரல்

=தெரிதல்,

குறள் 11.
உணரா

=தெரியாத,

குறள் 420;

=(உடன்பாட்டு வினையெச்சம்) உணர்ந்து

குறள் 1172;

=(எதிர்மறை வினையெச்சம்) அறியாமல், அறியாது, உணராது

குறள் 1172;

=(எதிர்மறை முற்றெச்சம்)உணராவாய்

குறள் 1172;

=தெரியமாட்டா,

குறள் 705.
உணராமை

=அறியாமல்,

குறள் 589;

=உடலுணர்த்திக் கூடாதுஒழிதல்,

குறள் 1304.
உணராய்
=நீங்கமாட்டாய்
குறள் 1246.
உணரின்
=தெரிந்துகொண்டால்,
குறள் 357.
உணரும்
=கருதும்,
குறள் 331;
=அறியும்,
குறள் 351.
உணர்க
=தெரிக,
குறள் 805.
உணர்ச்சி
=பொதுஉணர்வு,
குறள் 453;
=ஒத்தவுணர்வு,
குறள் 785.
உணர்ச்சியுள்
=மனத்தின்கண்,
குறள் 976.
உணர்தல்
=ஊடல்நீங்கல்,
குறள் 1109;
மெய்யுணர்தல், அதி.36.
உணர்த்தின்
=ஊடல்தணிப்பின்,
குறள் 1319.
உணர்த்தும்
=புலவியைநீக்கும்,
குறள் 1246.
உணர்ந்த
=அறிந்தன,
குறள் 1277.
உணர்ந்தவை
=அறிந்தவை,
குறள் 316.
உணர்ந்து
=தெரிந்து,
குறள் 359,417,516,712,834,1046.
உணர்வது
=அறிவினை,
குறள் 718.
உணர்வார்
=அறிவார்,
குறள் 257,334,708,709,716.
உணர்வாரை
=அறிவாரை,
குறள் 703.
உணர்வானை
=அறிபவனை,
குறள் 702.
உணர்வின்
=அறிவினையுடைய,
குறள் 420.
உணர்வு
=அறிவு,
குறள் 354.
உணல்
=உண்ணுதல்,
குறள் 229.
உணலி்ன்
=உண்ணுவதைவிட,
குறள் 1326.
உணவு
=சாப்பாடு,
குறள் 412.
உணவின்
=உணவு,
குறள் 413.
உணி
=உண்ணப்படுவது/குளம்,
குறள் 215.
உணில்
=உண்பதானால்,
குறள் 922.
உணின்
=உண்டால்,
குறள் 942.
உண்க
=அயில்க/உண்ணுக,
குறள் 922,943.
உண்ட
=அயின்ற,
குறள் 930.
உண்டது
=உண்ணப்பட்டது,
குறள் 1326.
உண்டல்
=உண்ணுதல்,
குறள் 82,1128,1145.
உண்டாயின்
=உண்டானால்,
குறள் 128,1005.
உண்டார்
=உண்டவர்கள்,
குறள் 253.
உண்டார்கண்
=உண்டவரிடத்தில்,
குறள் 1090.
உண்டி
=உணவு,
குறள் 945.
உண்டு
=உளது,
குறள் 54,71,89,110,190,315,342,469,571,707,
757,758,796,850,896,932,974,988,996,1059,
1075,1098,1117,1154,1164,1213,1214,1245,
1260,1273,1274,1281,1307,1323;
=உண்டாயிராநின்றது,
குறள் 1271;
=அயின்று,
குறள் 322,580,1033,1101,1107.
உண்டேல்
=இருப்பின்,
குறள் 368,1075,1151.

உண்ண

[தொகு]
உண்ண
=தின்ன,
குறள் 255.
உண்ணலின்
=உண்ணுதற்கு,
குறள் 1065.
உண்ணற்க
=அருந்தாதுஒழிக/குடிக்காதே,
குறள் 922.
உண்ணா
=அயிலாத,
குறள் 930.
உண்ணாது
=ஊனைத்தவிர்ந்து,
குறள் 160.
உண்ணாமை
=உண்ணாதிருத்தல்,
குறள் 255,257,259;
கள்ளுண்ணாமை, அதி.93.
உண்ணார்
=உண்ணமாட்டார்,
குறள் 258.
உண்ணான்
=நுகராதவன்,
குறள் 1001.
உண்ணின்
=உண்டால்,
குறள் 945,947.
உண்ணும்
=தின்னும்,
குறள் 527;
=கவரும்/போக்கும்,
குறள் 326,1084,1221.
உண்பது
=உண்ணப்படுவது,
குறள் 166;
=உண்டல்,
குறள் 1079.
உண்பர்
=துய்ப்பர்/நோக்குவர்,
குறள் 1311.
உண்பவர்
=பருகுபவர்,
குறள் 926.
உண்பார்
=பருகுபவர்,
குறள் 926.
உண்பான்
=தின்பவன்,
குறள் 251.
உண்பான்கண்
=தின்பவனிடத்தில்,
குறள் 946.
உண்மை
=உள்ளதாந்தன்மை/ஊழான்ஆகியபேதைமை(அறிவு),
குறள் 373;
=உளராதல்,
குறள் 572;
=உள்ளதன்மை,
குறள் 1212.
உண்மையான்
=உண்டாகலான்,
குறள் 571;
=உளராதல் தன்மையால்,
குறள் 1055;
=நிகழ்தலால்,
குறள் 1153.

உதவி

[தொகு]
உதவி
=நன்றி,
குறள் 70,103,105.
உதவிக்கு
=நன்றிக்கு,
குறள் 101.
உதவும்
=உதவிக் காக்கும்,
குறள் 746.
உப்பிற்கு
=உப்புக்கு,
குறள் 1050.
உப்பு
=சுவை/இனிமை,
குறள் 802,1328;
=உப்பு,
குறள் 1302.
உம்
அசைநிலை உம்மை,
குறள் 110,896...;
இழிவு சிறப்பும்மை
குறள் 29,202...;
இறந்தது தழீஇய எச்சவும்மை,
குறள் 12,31...;
உயர்வு சிறப்பும்மை,
குறள் 17,18...;
எண்ணும்மை,
15,42...;
எதிரது தழீஇய எச்சவும்மை,
32,120...;
முற்றும்மை,
5,19... .
உயர்
=உயர்ந்த,
குறள் 272.
உயர்ந்த
=ஓங்கிய,
குறள் 233;
=எய்தற்கரிய,
குறள் 346.
உயர்ந்து
=ஓங்கி,
குறள் 957.
உயர்வு
=உயர்ச்சி,
குறள் 135,595,596,743;
=பணியாமை,
குறள் 963.
உயல்
=ஒழிதல்,
குறள் 40;
=உளதாதல்,
குறள் 437;
=தப்புதல்,
குறள் 1154,1212.
உயிர்
=ஆன்மா,
குறள் 78,80,183,214,244,255,259,260,
268,290,322,326,327,330,334,501,778,
848,940,969,1013,1017,1020,1062,1070,
1084,1106,1132,1141,1163,1168,1209,
1213,1221,1230,1298.
உயிரார்
=உயிரையுடையவர்,
குறள் 777.
உயிரிடை
=உயிரினிடத்தில்,
குறள் 338,1122.
உயிரின்
=உயிரைக்காட்டிலும்,
குறள் 131;
=உயிரினின்றும்,
குறள் 258.
உயிரை
=உயிரை,
குறள் 1017.
உயிர்க்கு
=உயிருக்கு,
குறள் 30,31,68,73,122,190,231,
261,318,340,361,392,457,476,
557,851,945,972,1012,1124.
உயிர்த்து
=மோந்து,
குறள் 1101.
உயிர்ப்ப
=மூச்சுவிட,
குறள் 763,880.
உய்க்கிற்பின்
=துய்க்கவல்லனாயின்,
குறள் 440.
உய்க்கும்
=செலுத்தும்,
குறள் 121,1134;
=கொண்டுசெலுத்தும்,
குறள் 943.
உய்த்தல்
=ஈர்த்துப்போதல்/இழுத்துக்கொண்டுபோதல்,
குறள் 1287.
உய்த்து
=செலுத்தி,
குறள் 787;
=கொண்டுபோய்
குறள் 376,1076.
உய்த்துவிடும்
= திண்ணமாகச் செலுத்தும்,
குறள் 121,168.
உய்ப்பது
=செலுத்துவது,
குறள் 422.
உய்யா
= கடக்கமுடியாத,
குறள் 313.
உய்யாது
= செலுத்தாது,
குறள் 966.
உய்யார்
= தப்பமாட்டார்,
குறள் 896,900.
உய்வர்
= தப்புவர்,
குறள் 207.
உய்வு
= நீங்கும்வாயில்,
குறள் 110;
= தப்புதல்,
குறள் 896;
= ஒழிவு,
குறள் 1174.

உரம்

[தொகு]
உரம்
= திண்ணிய அறிவு,
குறள் 600;
= வலிமை,
குறள் 888.
உரவோர்
= திண்மையுடையவர்,
குறள் 136;
= ஊக்கமுடையவர்,
குறள் 597.
உரன்
= திண்மை,
குறள் 24;
= வேறல்/வெல்லுதல்,
குறள் 1263.
உரிமை
=உரியனாந்தன்மை,
குறள் 518,578.
உரியர்
= உரிமையுடையார்
குறள் 72,180.
உரியன்
= ஏற்றநிலையினன்,
குறள் 518.
உரியார்
= உரிமையுடையவர்,
குறள் 149.
உரியாள்
= உரிமையுடையவள்,
குறள் 149.
உரு
= தோற்றப்பொலிவு,
குறள் 684.
உருகும்
=கனிந்துஇளகும்,
குறள் 1069.
உருவம்
=தோற்றம்,
குறள் 273.
உருவு
= வடிவின்சிறுமை,
குறள் 667.
உருவொடு
=வடிவுடன்,
குறள் 585.
உருள்
= சுழல்கின்ற,
குறள் 667;
= புரள்கின்ற,
குறள் 933.
உரை
= நீ சொல்/சொல்வாய்,
குறள் 115.
= ஒருசொல்,
குறள் 193,
= புகழ்,
குறள் 581.
உரைக்கல்
= சொல்லுதல்,
குறள் 1271.
உரைக்கலான்
=சொல்லுதலால்,
குறள் 1076.
உரைக்கு
=சொல்லுவேன்,
குறள் 1181.
உரைக்கும்
= சொல்லும்,(எதிர்காலப் பெயரெச்சம்)
குறள் 193,564,912;
=உணர்த்தும்,
குறள் 1156;
=சொல்லும்(ஒன்.எதிர்கால வினைமுற்று)
குறள் 709,743,1235.
உரைத்தல்
= சொல்லுதல்,
குறள் 1162;
நலம்புனைந்துரைத்தல், அதி.112.
காதற்சிறப்புரைத்தல், அதி.113.
நாணுத்துறவுரைத்தல், அதி.114.
கனவுநிலையுரைத்தல், அதி.122.
உரைத்து
=சொல்லி,
குறள் 834,1237.
உரைப்பது
= சொல்லல்,
குறள் 1184.
உரைப்பவை
= சொல்பவை,
குறள் 232.
உரைப்பாய்
= சொல்லத்தொடங்குவாய்,
குறள் 1200.
உரைப்பார்
= சொல்லுபவர்,
குறள் 232.
உரைப்பார்க்கு
= சொல்லுபவர்க்கு,
குறள் 682.
உரைப்பான்
= சொல்லுபவன்,
குறள் 189,681,683,687,688,689.
உரையாதார்
= உரைக்கமாட்டாதவர்,
குறள் 650.
உரையாமை
= சொல்லாதிருத்தல்,
குறள் 223.

உலகத்தார்

[தொகு]
உலகத்தார்
= உலகத்திலுள்ள பெரியோர்,
குறள் 294,850.
உலகத்தார்க்கு
= உலகோருக்கு,
குறள் 1032.
உலகத்து
= உலகத்தில்,
குறள் 213,233,374,533,598,1198;
=உலகத்தினது,
குறள் 637.
உலகத்துள்
= உலகத்தில்,
குறள் 13.
உலகத்தோடு
=உலகத்துடன்,
குறள் 140,426.
உலகம்
=நிலவுலகம்/பூமி,
குறள் 11,19;
= உலகியல்,
குறள் 996;
= உலகம்,
குறள் 222,243,247,346;
=உயர்மக்கள்,
குறள் 117,1031;
= உயர்ந்தோர்,
குறள் 280,425,426.
உலகு
= நிலவுலகம்/பூமி,
குறள் 1,20,23,27,58,211,234,290,336,387,
389,520,542,544,571,572,578,612,874,1062;
=முத்தியுலகம்,
குறள் 1103;
= உலகநடை,
குறள் 215;
= மக்கள்,
குறள் 256,399,470,670,809,841,
970,994,1015,1025.
உலந்த
= வற்றிவிட்டன,
குறள் 1174.
உலைவு
= உறுதியின்மை,
குறள் 620,762;
=தளர்ச்சி,
குறள் 883.
உல்கு
=சுங்கம்/இறைப்பொருள்/வரி,
குறள் 756.

உவகை

[தொகு]
உவகை
=மகிழ்ச்சி,
குறள் 304,432,531;
ஊடலுவகை, அதி.133.
உவக்காண்
= உங்கே,
குறள் 1185.
உவக்கும்
= மகிழும்,
குறள் 69;
= மகிழ்தலால் எய்தும்,
குறள் 228.
உவந்து
= மகிழ்ந்து,
குறள் 842,1061,1130.
உவப்ப
= மகிழ,
குறள் 394.
உவப்பது
= மகிழ்தல்,
குறள் 1057.
உவப்பின்
= மகிழ்ந்தால்,
குறள் 707.
உவமை
= ஒப்பு,
குறள் 7.
உவரி
= கடல்,
குறள் 763.
உழக்கும்
= அநுபவிக்கும்,
குறள் 1135;
= வருந்தும்/அநுபவிக்கும்,
குறள் 1175,1229.
உழத்தொறூஉம்
= அநுபவிக்கும் போதெல்லாம்,
குறள் 940.
உழந்து
= துன்பம் துய்த்து,
குறள் 1031;
= காமநோயை அநுபவித்து,
குறள் 1131,1137;
= துன்பத்தை அநுபவித்து அநுபவித்து,
குறள் 1177.
உழப்பது
= துன்பத்தைத் துய்ப்பது,
குறள் 787,1172.
உழப்பர்
= துன்பத்தைத் துய்ப்பர்,
குறள் 936.
உழப்பிக்கும்
= துன்பம் உறுவிக்கும்,
குறள் 938.
உழவர்
= உழுபவர்,
குறள் 14,872.
உழவினார்
= உழுபவர்கள்/உழவர்கள்
குறள் 1036.
உழவு
= பயிர்த்தொழில்,
குறள் 1031;
உழவு, அதி.104.
உழாஅர்
= உழமாட்டார்,
குறள் 14.
உழி
= இடம்,
குறள் 415;
= சேமித்துவைக்குமிடம்,
குறள் 226;
= ஏழாம்வேற்றுமை உருபு,
குறள் 168 (தீயுழி=நரகத்தில்).
உழுது
= ஏரினால் உழுதலைச்செய்து,
குறள் 1033.
உழுவார்
= உழுகின்றவர்/உழுதொழில் வல்லார்,
குறள் 1032.
உழை
= இடத்தில்,
குறள் 594,1249.

உள்

[தொகு]
உள்
= உள்ளிடம்
குறள்421, 955. 1177;
= உளப்பாடு
குறள் 677;
=நடு (உள்ளூர்) குறள்:216, 217;
= உள்ளாய் நிற்கும் (உட்பகை) குறள்: 735, 883, 884, 885, 887, 888, 889;
= நெஞ்சம் குறள்: 119, 129, 487, 680, 927;
= உள்ளதாகிய (உள்வழி) குறள்: 170;
உள
= இருக்கின்றன, குறள்: 54, 223, 241, 304, 380, 483, 521, 527, 636, 781,995, 1099, 1101;
= இருக்கின்றவை, குறள்: 100, 479, 574, 480;
உளது
= உள்ளது, குறள்: 454;
= உள்ளது, குறள்: 235;
உளர்
= இருக்கின்றனர், குறள்: 406, 730, 1178, 1204;
= இருக்கின்றவர், குறள்: 180, 895;


உளன்
= இருக்கின்றான், குறள்: 294, 336;


உளார்
= இருப்பவர், குறள்: 25;
உளாள்
= உறைவாள் குறள்: 617;
உளி
= மூன்றாம் வேற்றுமை உருபு (இயல்புளி=இயல்பால்) ஆல், குறள்: 545;


உளேம்
= உள்ளேம், ஆவேம்;
குறள்: 1204
உளேன்
= இருக்கின்றேன், குறள்: 1167,
= உயிர் வாழ்கின்றேன், குறள்: 1206, 1263.
குறள்
உள்ள [உள்ள வெறுக்கை]
= ஊக்க மிகுதி, குறள்: 600, 971;
= நினைக்க, குறள்: 109, 357, 394, 540, 622, 1069, 1206, 1281.
குறள்
உள்ளது
= இருப்பது, குறள்: 53, 357, 641, 982, 1069, 1274;
= இருக்கின்றது, குறள்: 255, 572;
= அகத்தது, குறள்: 889, 1091.
குறள்
உள்ளத்தார்
= அகத்திருப்பவர், குறள்: 1249.
குறள்
உள்ளத்தால்
= நெஞ்சத்தால், குறள்: 282, 294, 309.
குறள்
உள்ளத்தின்
= நெஞ்சத்தினால், குறள்: 622.
குறள்
உள்ளத்து
= நெஞ்சத்தினது, குறள்: 595,
குறள்
உள்ளத்துள்
= நெஞ்சில், குறள்: 294, 1130.
குறள்
உள்ளப்படும்
= நன்கு மதிக்கப்படும், குறள்: 665.
குறள்
உள்ளம்
= நெஞ்சம், குறள்: 357, 438, 677, 799, 1057, 1069, 1170, 1207, 1270, 1324;
= ஊக்கம், குறள்: 592, 598, 798, 1263.
குறள்
உள்ளல்
= கருதுக, குறள்: 596;
= நினைத்தல், குறள்: 282, 1243, 1318.
குறள்
உள்ளற்க
= நினையாதுஒழிக, குறள்: 798.
குறள்
உள்ளார்
= இருக்கின்றார்,
குறள், 1127.
உள்ளான்
= நினைக்கமாட்டான்,
குறள் 309, 930.
உள்ளி
= நினைத்து,
குறள்: 1230, 1231, 1243, 1249, 1264, 1317,1320.
உள்ளியது
= நினைத்தபேறு, பொருள்;
குறள்: 309, 540,
உள்ளின்
= நினைத்தால், குறள்: 799, 1201, 1207;
= அகத்தினின்றும், குறள்: 1126.
குறள்
உள்ளினேன்
= நினைத்தேன், குறள்: 1316.
குறள்
உள்ளுக
= நினைக்க, குறள்: 539.
குறள்
உள்ளும்
= நினையாநின்றது, நினைக்கின்றது;
குறள்: 1298.
உள்ளுவது
= நினைப்பது, குறள்: 596.
குறள்
உள்ளுவர்
= நினைப்பர், குறள்: 107.
குறள்
உள்ளுவன்
= நினைப்பேன், குறள்:1125, 1184.
குறள்
உள்ளுவேன்
= நினைப்பேன், குறள்: 1136.
குறள்
உள்ளுள்
= (வெளிப்படையாகவன்றி) உள்ளுக்குள்ளே, குறள்: 1057.
குறள்

உற

[தொகு]
உற
= பொருந்த, குறள்: 399, 535;
= மிக, குறள்: 659,
உறங்கி
= தூங்கி, குறள்: 339.
உறங்குவது
= தூங்குதல், குறள்: 339,
உறல்
= அடைதல், குறள்:378
= சுற்றமாதல்(உறவு முறையான்) = (புறத்து) உறவு (முறைத்தன்மையோடு கூடிய)
குறள்: 885.
உறாஅ
= பொருந்தாமல், குறள்: 1052.
உறாஅதவர்
=நொதுமலர்/(உறவினரும் இல்லாது அயலாரும் இல்லாத நிலை), குறள்: 1096;
= அன்புடையராகாதவர், குறள்: 1245, 1292.
உறாஅது
= பொருந்தாது, குறள்: 1143.
உறாஅமை
= வாரா வண்ணம், குறள்: 442.
உறாஅர்
= நொதுமலர் (பகையும் உறவும் இல்லாதவர்), குறள்: 1097.
உறாஅர்க்கு
= கூடாதாருக்கு, குறள்: 1200.
உறின்
= உற்றால், குறள்: 559, 778;
= பயன் உண்டானால், குறள்: 812;
= (மெய்யுறக்) கலந்தால், குறள்: 1270.


உறு
= துன்பம்[உறுகண், உறுபடை, உறுபசி, உறுநோய், உறுதுயர்], குறள்: 261;
= மிக்க, பெரிய(, குறள்:498, 734, 1200, 1275;
= வந்து முற்றிய(பகைவர்)[உறுபகை, உறுபொருள்], குறள்:744;
= தானே வந்துற்ற(பொருள்), குறள்: 756;
= உறுதோறு= பொருந்தும்போதெல்லாம் (உறுந்தோறு-உறுதோறு எனத் திரிந்துநின்றது), குறள்:1106;
= அதிகாரம், 119 - பசப்புறுபருவரல்.
உறுதல்
= அடைதல், குறள்: 628, 629;
= அவாவுதல், [காமுறுதல்(காமம்+உறு= காமுறு)], குறள்: 402.
உறுதி
= நன்மை, குறள்: 638;
= மிகுதி, குறள்: 690;
= நல்லறிவு, குறள்: 796.
உறுத்தல்
= உணர்வித்தல், [அறன் வலியுறுத்தல், அதி.4; தகையணங்குறுத்தல், அதி.109; அலரறிவுறுத்தல், அதி.115; குறிப்பறிவுறுத்தல், அதி.128.]
உறுப்பினுள்
= அங்கத்துள், குறள்: 703;
= (கண் முதலிய) அவயவயங்களுள், குறள்: 705.
உறுப்பு
= அங்கம், குறள்: 79, 704, 737, 761, 802;
= உடம்பு, குறள்: 993;
= தலைமகள் தன் கண்ணும், தோளும், நுதலும் முதலாகிய அவயவயங்கள் தம் அழகழிதல் [உறுப்புநலனழிதல், அதி.124.]
உறும்
= (முற்பட்டு) நிற்கும், குறள்: 380, 707, 1023;
= பொருந்தும், குறள்: 639;
= நன்று, குறள்: 816, 817, 1061;
= எய்தும் [உறும் போழ்து, உறும் அல்லல்], குறள்: 539, 1301.
உறுவது
= அடைவது, குறள்: 399, 813, 1259, 1271.
உறூஉம்
= மிகுவிக்கும், குறள்: 94.
உறை
= ஆயுள், குறள்: 564;
= ஆளுமிடம், குறள்: 680;
= மழை, குறள்: 559;
= தங்குகின்ற [உறை நிலத்தோடு, உறைபதி], குறள்: 499, 1015.
உறைந்து
= தங்கினாற்(போன்றது) [உறைந்தற்று]. குறள்: 208, 890.
உறையும்
= தங்கும் [வான் உறையும்], குறள்: 50.
உறைவது
= ஒழுகுவது, குறள்: 426.
உறைவர்
= தங்கியிருப்பவர், குறள்: 1130.
உற்ற
= நேர்ந்த, குறள்: 261, 442, 624, 625;
= உண்டாகிய, குறள்: 887, 888;
= புணர்ந்த, குறள்: 1206;
= அடைந்த, குறள்: 1256;
= எய்தின, குறள்: 1239.
உற்றக்கடை
= எய்தினால், குறள்: 372, 837.
உற்றக்கால்
= வந்தால், குறள்: 372, 837.
உற்றது
= அடைந்தது, குறள்: 708.
உற்றபின்
= நேர்ந்தால், குறள்: 662.
உற்றவரின்
= எய்தியவரைக் காட்டிலும் [ஏமுற்றவரின்], குறள்:873.
உற்றவன்
= (நோய்)அடைந்தவன், குறள்: 950.
உற்றவை
= பொருந்திய இடையூறுகள், குறள்: 512.
உற்றன
= உடையவாயின, குறள்: 1179.
உற்றார்
= (இன்பம்)அடைந்தவர், குறள்: 75, 1255;
= உடையார், குறள்: 207;
= நண்பர், குறள்: 1097;
= (காதலை)மிக அடைந்தவர் [காமுற்றார்], குறள்: 1133.
உற்றார்க்கு
= மேற்கொண்டவர்க்கு, குறள்: 345.
உற்றால்
= (அன்பு)பட்டால், குறள்: 1245.
உற்றான்
= (நோய்)அடைந்தவன், குறள்: 949.
உற்று
= எய்தி, குறள்: 75, 1290;
= தீண்டி, குறள்: 1101;
= வேண்டி, குறள்: 1244;
= அவாவினாற்(போலும்) [காமுற்றற்று], குறள்: 402.


அகஇணைப்பான்கள்

[தொகு]
/உட/உண்/உத/உர/உல/ உவ/ உள் / உற/


பார்க்க:

[தொகு]

திருக்குறள் அகரமுதலிஅகரவரிசை

திருக்குறள்அகரமுதலி ஆகாரவரிசை

திருக்குறள்அகரமுதலி இகரவரிசை

திருக்குறள்அகரமுதலி ஈகாரவரிசை

திருக்குறள்அகரமுதலி ஊகாரவரிசை

திருக்குறள்அகரமுதலி எகரவரிசை

திருக்குறள்அகரமுதலி ஏகாரவரிசை

திருக்குறள்அகரமுதலி ஐகாரவரிசை

திருக்குறள்அகரமுதலி ஒகரவரிசை

திருக்குறள்அகரமுதலி ஓகாரவரிசை

திருக்குறள்அகரமுதலி ககரவரிசை