திருக்குறள்அகரமுதலி ஊகாரவரிசை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பார்க்க:

திருக்குறள்
திருவள்ளுவமாலை
திருக்குறள் முதற்குறிப்பு அகரமுதலி
திருக்குறள் கடைச்சொல் அகரமுதலி



திருக்குறள் அகரமுதலி ஊகார வரிசை[தொகு]

[தொகு]

ஊக்க
=நெகிழ்க்க,
குறள் 1238.
ஊக்கத்தின்
=மனவெழுச்சியால்,
குறள் 473.
ஊக்கம்
= உள்ளக்கிளர்ச்சி, 382;
= வலிமிகுதி, 486;
= பெருமை, 498, 591, 593, 594, 744;
= மனம் மெலிதலின்றி வினை செய்தற்கண் கிளர்ச்சியுடைத்தாதல், [ஊக்கமுடைமை, அதி. 60].


ஊக்காது
= நோக்காது, 253.
ஊக்கார்
= மேற்கொள்ளார், 463.
ஊக்கி
= வினைசெய்தலைத் தொடங்கி, 473.
ஊக்கின்
= முயன்றால், 476;
= மேற்கொள்ளின், 858.
ஊக்கும்
= (வெல்லக்) கருதும் (தன்மையுடையார்) - [ஊக்கும் தன்மையவர்], 855;
= மேற்கொள்ளும், 858.
ஊங்கு
= மேற்பட்ட, 31, 32, 122, 460, 644;
= மேல், 1065.

ஊடல்[தொகு]

ஊடல்
= பிணங்குதல், புலத்தல், 1109, 1310, 1326;
= பிணங்குதலைத் தலைமகள் உவத்தலும், தலைமகன் உவத்தலும், [ஊடலுவகை, அதி. 133.]
ஊடலின்
= புலத்தலில், 1307, 1322, 1327.
ஊடற்கண்
= புலத்தலில், 1284.
ஊடாமை
= பிணங்காமை, 1282.
ஊடி
= பிணங்கி, 1260, 1312, 1328.
ஊடியவரை
= பிணங்கிய(பரத்தையரை), 1304.
ஊடிவிடும்
= திண்ணமாகப் பிணங்கும், 1039.
ஊடினாள்
= பிணங்கினாள், 1314.
ஊடுக
= புலக்க, 1329.
ஊடுதல்
= புலத்தல், 1321, 1330.
ஊட்டா
= உறுவியாமல், 378.

ஊண்[தொகு]

ஊண்
= உண்ணுதல், 44, 227.
= உண்ணப்படுவது, உணவு, 939, 1012.
= உண்டலை(இயல்பாக உடையவர்) [ஊண்மாலையவர்], 1035.
ஊதியம்
= வருவாய், 231, 449, 461.
= பேறு, 797;
= ஆக்கம், 831.


ஊர்[தொகு]

ஊர்
= நகரம், 397, 1129, 1130, 1142, 1143, 1150, 1158;
= (நடு)ஊர் - [ஊள்ளூர்], 216;
= நடுஊருள் வாழ்பவர், 927;
= உபகாரியாந்தன்மை [ஊராண்மை], 773;
= சிற்றூரிற்(குளம்) - [ஊருணி], 215.
ஊர
= அடர, (601).
ஊரவர்
= ஊரிலுள்ள மகளிர், 1147, 1220.
ஊரார்க்கு
= ஊரில் உள்ளவர்க்கு, 1180.
ஊரும்
= செலுத்தாநின்றது/செலுத்தும், 1182.
ஊருள்
= நகரினுள், 1008.
ஊர்தல்
= ஏறிச்செலுத்துதல், 1136.
ஊர்ந்தானிடை
= செலுத்துவான்கண், 37.
ஊர்ந்து
= ஏறிப்போய்நின்று, 979.
ஊர்வது
= அடரவல்லது, 621;
= மேற்கொள்ளல், 1185.

ஊழ்[தொகு]

ஊழ்
=முறைமை/(வினைப்பயன் சென்றடையும்)முறை, 372;
= இருவினைப்பயன் செய்தவனையே சென்றடைவதற்கு ஏதுவாகிய நியதி [ஊழ் - அதி.38].
ஊழால்
ஊழ்போல, 380.
ஊழி
= முறைமையுடையது/ பிரளயகாலம், 989.
ஊழின்
= ஊழ்போல, 380.
ஊழை
= விதியை, 620.
ஊழ்த்து
= மலர்ந்து, 650.

ஊறிய[தொகு]

ஊறிய
= சுரந்த, 1121.
ஊறு
= தொடுதலுணர்ச்சி, 27;
= உற்றகாலம், 535;
= பழுதுபடும் வினை, 662;
= உறுதல்/அடைதல், 665, 761, 762;
= தடை[இடையூறு], 676.
ஊறுபாடு
= துன்பம் விளைதல், 945,
ஊறு்ம்
= சுரக்கும், 396.
ஊற்று
= நீரூற்று, 1161;
= பற்றுக்கோடு [[ஊற்றாந்துணை-ஊன்று>ஊற்று]], 414;
= ஊற்றாகிய/பற்றுக்கோடாகிய(கோல்) - [ஊற்றுக்கோல்], 415.

ஊன்[தொகு]

ஊன்
= உடம்பு, 251, 252, 254, 255, 256, 968.
ஊனை
உடம்பை, 1013.
ஊன்றிய
= தாங்கிய, 983.
ஊன்றும்
= நிலைநிறுத்தும், 597;
= தாங்கு(தூண்) - [ஊன்றும்- தூண், நிலை, நல்லாள்], 615;
= (திண்மை), 789;
= (நல்ல ஆண்மகன்), 1030.

அகஇணைப்பான்கள்[தொகு]

ஊக்க ஊர் ஊழ் ஊறி ஊன்


பார்க்க:[தொகு]

திருக்குறள் அகரமுதலிஅகரவரிசை

திருக்குறள்அகரமுதலி ஆகாரவரிசை

திருக்குறள்அகரமுதலி இகரவரிசை

திருக்குறள்அகரமுதலி ஈகாரவரிசை

திருக்குறள்அகரமுதலி உகரவரிசை

திருக்குறள்அகரமுதலி எகரவரிசை

திருக்குறள்அகரமுதலி ஏகாரவரிசை

திருக்குறள்அகரமுதலி ஐகாரவரிசை

திருக்குறள்அகரமுதலி ஒகரவரிசை

திருக்குறள்அகரமுதலி ஓகாரவரிசை

திருக்குறள்அகரமுதலி ககரவரிசை