திருக்குறள்அகரமுதலி நாகாரவரிசை
Appearance
திருக்குறள் அகரமுதலி நாகார வரிசை
[தொகு]நாகாரம்
[தொகு]நா
- நா
- = நாக்கு, 127
- = ௸, 335
- = ௸, 641.
- நாகம்
- = நல்ல பாம்பு, 763.
- நாகரிகம்
- = கண்ணோட்டம், 580.
- நாட
- = தேடி வருந்த, 739.
- நாடா
- = அளவிறந்த, 74;
- = தேடி வருந்தாமல், 739.
- நாடாது
- = ஆராயாமல், 791.
- நாடாமை
- = கருமங்களிற் செய்வன தவிர்வன நாடியறியாதிருத்தல், 833.
- நாடி
- = அறிந்து, 948|1|;
- = ஆராய்ந்து, 96
- = ௸, 242
- = ௸, 504
- = ௸, 511
- = ௸, 516
- = ௸, 553
- = ௸, 561;
- = ஆராய்ந்து தெளிந்து, 948|2|;
- = துணிந்து, 948|1|;
- = தேடி, 1214.
- நாடிய
- = ஆராய்ந்த, 518.
- நாடு
- = தேசம், 397
- = ௸, 553
- = ௸, 731
- = ௸, 732
- = ௸, 733
- = ௸, 734
- = ௸, 735
- = ௸, 736
- = ௸, 739
- = ௸, 740;
- = உலகம், 1323;
- = [நாடு], அதி. 74.
- நாடுக
- = ஆராய்க, 520.
- நாட்ட
- = நாட்டில் உள்ளன, 545.
- நாட்டிற்கு
- = தேசத்திற்கு, 737
- = ௸, 738.
- = ௸,
- நாட்டின்
- = நாடுகளுள்ளும், 736.
- நாட்டு
- = உலகத்தில், 966.
- நாண்
- = இழிதொழில்களில் மனஞ் செல்லாமை, 502
- = ௸, 902
- = ௸, 907
- = ௸, 924
- = ௸, 951
- = ௸, 952
- = ௸, 960
- = ௸, 983
- = ௸, 1012
- = ௸, 1013
- = ௸, 1014
- = ௸, 1016
- = ௸, 1017
- = ௸, 1019
- = ௸, 1020
- = ௸, 1089
- = ௸, 1163
- = ௸, 1183
- = ௸, 1247
- = ௸, 1257
- = ௸, 1297;
- = வெட்கப்படுந்தன்மை[நாணுடைமை], அதி. 102.
- நாண
- = வெட்கப்பட, 314
- = ௸, 1149;
- = நாணத்தக்க பழியை[நாணத்தக்கது], 1018|1|
- = விட்டு நீங்கத்தக்க குற்றத்தை, 1018|2|.
- நாணாமை
- = (பழிபாவங்கட்கு)வெட்கப்படாமை, 833.
- நாணார்
- = அஞ்சார், 506;
- = வெட்கமுற மாட்டார், 1205.
- நாணால்
- = வெட்கங் காரணமாக, 1017;
- = இயந்திரக் கயிற்றால், 1020.
- நாணான்
- = நாணமாட்டான், 1018.
- நாணின
- = வெட்கமுற்றன, 1231.
- நாணினை
- = வெட்கத்தை, 1132.
- நாணு
- = இழி தொழில்களில் மனஞ் செல்லாமை, வெட்கம், 902
- = ௸, 903
- = ௸, 1011
- = ௸, 1162
- = ௸, 1251;
- = தலைமகனும் தலைமகளும் தோழிக்கு நாணழிவைச் சொல்லுதல்[நாணுத்துறவுரைத்தல்], அதி. 114.
- நாணுக்கு
- = வெட்கத்திற்கு, 1015.
- நாணுதல்
- = பழி பாவங்கட்கு அஞ்சுதல், 1011.
- நாணுபவர்
- = பாவங்கட்கு அஞ்சுபவர், 172.
- நாணுவார்
- = பழி பாவங்கட்கு அஞ்சுவார், 433;
- = அஞ்சுவாரை, 1015.
- நாணுவானை
- = பழி பாவங்கட்கு அஞ்சுபவனை, 794.
- நாணொடு
- = வெட்கத்துடன், 1133
- = ௸, 1134.
நாம
[தொகு]- நாம
- = அச்சம், 149.
- நாமம்
- = பெயர், 360.
- நாம்
- = நாங்கள், 1195.
- நார்
- = அன்பு, இரக்கம், 833
- = ௸, 958.
- நால்
- = நான்கு(ஆகிய), 950.
- நாவாய்
- = மரக்கலம், 496.
- நாவிற்கு
- = நாக்கிற்கு, 1066.
- நாவினால்
- = நாக்கினால், 129.
- நாள்
- = இரவும் பகலுமாகிய காலம், தினம், 38
- = ௸, 326
- = ௸, 334
- = ௸, 520
- = ௸, 553
- = ௸, 776
- = ௸, 803
- = ௸, 1146
- = ௸, 1169
- = ௸, 1206
- = ௸, 1233
- = ௸, 1261
- = ௸, 1266
- = ௸, 1269|1|2|;
- = நாளை, 1269|3|
- நாளேம்
- = நாள்களையுடையோம், 1278.
- நாளை
- = ஒரு நாள், 156;
- = நாள்களை, 776.
- நாறா
- = மணங்கமழாத, 550.
- நாற்றம்
- = மணம், 27
- = ௸, 1113
- = ௸, 1274.
- நான்கின்
- = நான்கினது, 501
- = ௸, 743.
- நான்கு
- = நாலு, 35
- = ௸, 146
- = ௸, 382
- = ௸, 390
- = ௸, 513
- = ௸, 605
- = ௸, 766
- = ௸, 953.
திருக்குறள்அகரமுதலி நாகாரவரிசை முற்றும்
திருக்குறள் அகரமுதலி நிகர வரிசை
[தொகு]நிகரம்
[தொகு]நி
- நிகழ்பவை
- = நேரும் சொற் செயல்கள், 582.
- நிச்ச
- = நாடோறும் நிகழ்கின்ற /நாள்தோறும் நிகழ்கின்ற, 532.
- நிணம்
- = கொழுப்பு, 1260.
- நிரந்தவர்
- = (வாய்ப்புப் பெறுந்துணையுங்)கூடியொழுகுபவர், 821.
- நிரந்து
- = ஒழுங்குபடுத்திக் கோத்து, 648.
- நிரப்பிய
- = நிரப்ப வேண்டி, 229.
- நிரப்பினுள்
- = வறுமையுள், 1049.
- நிரப்பு
- = ஏழ்மை, 532
- = ௸, 1048
- = ௸,1056
- = ௸,1060.
- = ௸,
- = ௸,
- நிரம்பிய
- = ஏராளமான, 401.
நில
[தொகு]- நில
- = நிலத்தினது[நிலவரை], 234;
- = நிலத்தையுடைய[நில மன்னன்], 544,
- நிலக்கு
- = நிலவுலகிற்கு, 570
- = ௸, 572
- = ௸, 1003.
- நிலத்தின்
- = பூமியினது, 959.
- நிலத்து
- = பூமியினது, 452;
- = பூமியின்கண், 28
- = ௸, 68
- = ௸, 307
- = ௸, 413
- = ௸, 496
- = ௸,526
- = ௸,898ழ
- நிலத்தொடு
- = பூமியோடு, 1323.
- நிலத்தோடு
- = நிலத்தின்கண், 499.
- நிலம்
- = தரை, 151
- = ௸, 239
- = ௸, 386
- = ௸, 1039;
- = பூமி, 990
- = ௸, 1040.
- நிலமிசை
- = வீட்டுலகின்கண், 03.
- நிலன்
- = நாடு, 383;
- = தரை, 1094
- = ௸, 1114.
- = ௸,
- நிலை
- = உடம்பு[உயிர் நிலை=உயிரால் நிற்கப்படுவது], 80
- = ௸, 255,
- = ௸, 290;
- = நிலைமை, 325;
- = நெறி, 716;
- = திண்மை, 789;
- = நிற்குந் தன்மை, 966;
- = பொழுது = சந்தர்ப்பம், 370,
- = ௸, 489
- = ௸, 967;
- = சலியாது நிற்றல், 449
- = ௸, 1036;
- = (போரில்)சலியாது நிற்கும் மக்கள் = படைவீரர்கள், 770;
- = [கனவுநிலையுரைத்தல்], அதி. 122
- நிலைக்கு
- = (போர்)நிலைமைக்கு, 745.
- நிலைமை
- = நிற்குந்தன்மை[நடுவுநிலைமை], அதி. 12.
- நிலைமையான்
- = இயல்பினையுடையவன், 273.
- நிலையர்
- = (நன்மைக்கண்)நிற்றலுடையவர், 1189.
- நிலையாமை
- = நிலைத்தலில்லாத தன்மை, 349;
- = (தோற்றமுடையன யாவும் நிலையுதல் இலவாந்தன்மை)[நிலையாமை], அதி. 34.
- நிலையின்
- = நெறியினின்றும், 124;
- = உயர்ந்த தன்மையினின்றும், 964.
- நிலையின
- = நிலைத்த தன்மையுடையவை, 331.
- நில்லன்மின்
- = நிற்காதீர்கள், 771.
- நில்லாதவற்றை
- = நிலைபெறாதவைகளை, 331.
- நில்லாது
- = நிலைக்காமல், 592.
நிழல்
[தொகு]- நிழல்
- = சாயை, 208
- = ௸, 742
- = ௸, 881.
- நிழலது
- = நிழலின்கண்ணது, 1309.
நிறுத்து
[தொகு]- நிறுத்து
- = நிறுத்தி = நிலைபெறச்செய்து, 1174;
- = அகற்றி[நீக்கி நிறுத்து - ஒருசொல்நீர்மைத்து.], 1132.
- நிறை
- = மறை பிறர் அறியாமை, 864
- = ௸, 917
- = ௸, 1138
- = ௸, 1251
- = ௸, 1254;
- = சால்பு, 154;
- = கற்பு, 57;
- = நிரம்பிய, 28
- = ௸, 782
- = ௸, 1315;
- = (தலைமள் மனத்தடக்கற்பாலனவற்றை வேட்கை மிகுதியான் அடக்கமாட்டாது வாய் விடுதல்[நிறையழிதல்], அதி. 126.
- நிறைந்த
- = நிரம்பிய, 1117
- = ௸, 1272.
- நிறைந்து
- = நிரம்பி = நிரம்பினாற்(போன்றது), 215
- = ௸, 523.
- நிறைய
- = மிக, 1282.
- நிற்க
- = அறஞ் செய்தலில் வழுவற்க, 391;
- = (எல்லைக்கண் = சந்தர்ப்பத்தில்)நின்றுகொண்டிருக்க, 708.
- நிற்கும்
- = நிலைத்திருக்கும், 288
- = ௸, 544
- = ௸, 946
- = ௸, 1141;
- = நிலைத்திருக்கும்[நிற்கும்பழி], 145
- = ௸,[நிற்கும் புகழ்], 232;
- = தாங்கும்,[எதிர்நிற்கும் ஆற்றலது], 765.
- நிற்பது
- = நிற்றல், 233.
- நிற்பவை
- = நிற்கக் கூடியவை, 636.
- நிற்பேம்
- = நிற்கக் கடவோம், 1260.
- நின்
- = உனது, 1151
- = ௸, 1222
- = ௸, 1271
- = ௸, 1288
- = ௸, 1311.
- நினைக்க
- = எண்ணுக, 250.
- நினைக்கப்படும்
- = ஆராயப்படும், 169.
- நினைத்தக்கால்
- = எண்ணினால், 1296.
- நினைத்து
- = எண்ணமிட்டு, 1320.
- நினைந்தவர்
- = (இன்பத்தை)உள்ளியவர் = (முன்கூடிய ஞான்றை இன்பத்தினை நினைந்து தலைமகள் தனிமைஎய்தலும், பாசறைக்கண் தலைமகன் தனிமை எய்தலுமாம்)[நினைந்தவர் புலம்பல்], அதி. 121.
- நினைந்து
- = எண்ணியெண்ணி, 1209.
- நினைப்ப
- = நினைத்தால், 1202.
- நினைப்பவர்
- = எண்ணுபவர், 1203.
- நினைப்பானை
- = கருதுபவனை, 519.
- நினைப்பின்
- = எண்ணினால், 1208.
- நினையார்
- = எண்ணமாட்டார், 1203.
- நினையுங்கால்
- = ஆராயும்போது, 674.
- நின்ற
- = நிலைபெற்ற, 41
- = ௸, 698
- = ௸, 898.
- நின்றக்கடை
- = நீங்காதபோது, 1019.
- நின்றது
- = நிலைபெற்றது, 543.
- நின்றவர்
- = நின்ற வீரர், 771.
- நின்றார்
- = நின்றவர், 06
- = ௸, 29
- = ௸, 806.
- நின்றாரின்
- = நின்றவர் போல, 142.
- நின்றாருள்
- = நின்றவர்களுள், 142.
- நின்றான்
- = நின்றவன், 176
- = ௸, 552.
- நின்று
- = நிலைபெற்று, 13;
- = நிற்றலைச் செய்து, 184
- = ௸, 286
- = ௸, 468
- = ௸, 771
- = ௸, 1053
- = ௸, 1055
- = ௸, 1197;
- = (நிற்ப என்பது திரிந்து நின்றது) = இடையறாது நிற்ப, 11.
- நின்னின்
- = உன்னைக் காட்டிலும், 1111.
- நின்னொடு
- = உன்னுடன், 1294.
திருக்குறள் அகரமுதலி நிகரவரிசை (நி) முற்றும்
பார்க்க:
[தொகு]அ, ஆ- இ- ஈ- உ- ஊ- எ- ஏ- ஐ- ஒ- ஓ.
க- கா,கி,கீ- கு,கூ- கெ,கே,கை- கொ,கோ,கௌ. ச,சா,சி,சீ,சு,சூ- செ-- சே,சொ,சோ. ஞா. த- தா,தி,தீ- து,தூ,தெ,தே. ந- நா, நி- நீ,நு,நூ- நெ,நே,நொ,நோ.