திருமுருகாற்றுப்படை
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- திருமுருகாற்றுப்படை, பெயர்ச்சொல்.
மொழி பெயர்ப்புகள்
[தொகு]{{சிறு-மொழி}en}}
(ஆங்) - an old thamizh literary book.
நூல் வகை
[தொகு]- சங்க கால இலக்கியங்களான பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் போன்று திருமுருகாற்றுப்படையும் பத்துப்பாட்டு என்னும் தொகை நூல்களுளொன்று
நூலின் அமைப்பு
[தொகு]- நேரிசை ஆசிரியப் பாவினால் இயன்ற இந்நூல் 317 அடிகளைக் கொண்டது.
நூலின் பகுப்பு
[தொகு]- முருகனின் அறுபடை வீடுகளான (01) திருப்பரங்குன்றம் (02) திருச்சீரலைவாய் (03) திருவாவினன்குடி (04) திருவேரகம் (05) குன்றுதோராடல் (06) பழமுதிர் சோலை ஆகியவற்றைத் தலைப்பாக வைத்து ஆறு பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது.
நூலை இயற்றியவர்
[தொகு]- மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் என்னும் பெரும்புலவர்.
நூலின் காலம்
[தொகு]- கி.பி.7-ஆம் நூற்றாண்டுக்குப் பின் இந்நூல் தோன்றியதாக அறிஞர்கள் கருதுகின்றனர். கூடுதல் செய்திகளுக்குக் காண்க: தமிழ்ப் பணி மன்றம் வலைப்பூ.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://thamizhppanimanram.blogspot.com/2019/10/01-ilakkiyam.html