தேவன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
புத்த தேவன்
ரிஷப தேவன்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

தேவன், பெயர்ச்சொல்.


பொருள்[தொகு]

  1. இறைவன்
  2. கடவுள்
  3. பகவான் வடமொழி


மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. almighty
  2. god

விளக்கம்[தொகு]

தேவன் என்னும் சொல் வடமொழி देव..தே3-வ...என்னும் சொல்லின் தமிழ் வடிவம்...தேவர் என்றும் சொல்வர்...வடமொழியில் பற்பல அர்த்தங்களுள்ள தேவ என்னும் சொல்லுக்கு இறைவன்/கடவுள் என்ற ஒரு பொருளும் உண்டு...வேத காலத்து மிகப்பழமையான தேவன் என்னும் சொல் இந்துக்களின் தெய்வங்களையே மற்ற சமயங்கள் இந்திய நாட்டிற்கு வரும்வரை குறிப்பிட்டது...எடுத்துக் காட்டாக மகாதேவன், பிரம்மதேவன், விஷ்ணுதேவன், இராமதேவன், கண்ணதேவன், சூரிய தேவன், அக்கினிதேவன், வாயு தேவன், வருண தேவன் போன்ற இன்னும் பல தெய்வப் பெயர்களைக் கூறலாம்...பௌத்தம், சமணம், கிறிஸ்துவம் ஆகிய மற்ற மதங்கள் நாட்டில் பிரபலமடைந்த பிறகு அந்தந்த சமயங்களின் இறைவனைக் குறிப்பிடவும் தேவன் என்ற சொல் பயன்படுகிறது...அவ்வகையில் பௌத்தத்தில் இறைவன் கௌத்தம புத்தனாகிய புத்ததேவன், சமணத்தில் முதல் தீர்த்தங்கரரான ரிஷப தேவன், இன்னும் பிற தேவர்கள் மற்றும் கிறித்துவத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைக் குறிக்கும் சொல்.( மொழிகள் )

சான்றுகள் ---தேவன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=தேவன்&oldid=1967959" இருந்து மீள்விக்கப்பட்டது