தொடர்மொழிக்கு ஒரு மொழி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

நாம் அதிகம் தேடும் தொடர் மொழிக்கான ஒரு மொழிகள் சில இதோ ;

* பால்வீதி மண்டலம் :- வானத்தின் ஒரு புறத்தில் வெண்ணிற நீட்சியாகத் தோன்றும் நட்சத்திரத் திரளின் ஒளி

* வஞ்சிப்போர்  :- மண்ணாசை கொண்டு ஒரு மன்னன் மீது தொடுக்கும் போர்

* புருடார்த்தம்  :- ஆறாம், பொருள், இன்பம், வீடு என்னும் நாட்பொருள்

* பாசறை :- பகை மேற் சென்று அரசன் தன படையுடன் தங்கியிருக்கும் இடம்

* மெய்கீர்த்தி  :- கல்லில் அல்லது செப்பேட்டில் பொரிக்கப்படும் ஒருவருடைய புகழ்

* சுருங்கை :- நிலத்தின் கீழ் அமைக்கப்படும் இரகசிய வழி

* செய்குன்றம் :- அரசருக்குரிய சோலையில் செயற்கயாக அமைக்கப்பட்ட சிறு குன்று

* சுயம்பு  :- ஒருவராலும் படைக்கப்படாது தானே தோன்றியது

* இடக்கரடக்கல் :- சபையில் சொல்லத்தகாத சொல்லை மறைத்து வேறு வகையில் சொல்லுதல்

* பரிவேடம் :- சூரியனையும் , சந்திரனையும் சூழ்ந்து தோன்றும் ஒளி வட்டம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=தொடர்மொழிக்கு_ஒரு_மொழி&oldid=1904665" இலிருந்து மீள்விக்கப்பட்டது