நகை நட்டு
Appearance
நகை நட்டு
சொல் பொருள்
நகை – இழை எனப்படும். தண்டட்டி, பாம்படம் போல்வன நகை. நட்டு – முருகு, கொப்பு, காப்பு, தோடு, முதலியன நட்டு.
விளக்கம்
முன்னது பேரணிகலங்களையும் பின்னது சிற்றணிகலங்களையும் குறிக்கும். முன்னவற்றிலும் திருகு அமைப்பு இருந்தாலும் பின்னவற்றில் திருகமைப்பே சிறப்பும் தனித்தன்மையும் உடையதாதல் கருதுக. முன்னவற்றில் பளிச்சிடலும் அசைவும் பின்னவற்றில் அசைவிலா நிலைப்பும் உண்மை கருதுக. “பெண்ணுக்கு நகை நட்டு என்ன போட்டீர்கள்?” என்று வினவார் அரியர்.