நங்கை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
[தொகு]- நங்கை, .
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- lady, woman of quality or distinction
- son's wife
- elder brother's wife
தமிழ் இலக்கியங்களில் நங்கை
[தொகு]
- திவ். திருப்பா. 14 நங்கா யெழுந்திராய்
- கந்தபுராணம்: நந்தி தன் கணத்தினோரை நங்கை பால் உதிக்கச் செய்தான்
- கந்தபுராணம்: நல் திறமே இது நங்கை சிந்தனை
- கந்தபுராணம்: 426x4 அத்தன் மெய் குழைத்த நங்கை அவன் விழி புதைத்த நாள் போல்
- கந்தபுராணம்: மேதகும் எயினர் பாவை விண் உலகு உடைய நங்கை
- கம்பராமாயணம்:'எம் முனாள் நங்கை , இந்த இரு நதி ஆயினாள்' என்று
- கம்பராமாயணம்: நாறு பூ குழல் நங்கை யர், கண்கள் நீர்
- கம்பராமாயணம்: நல் நெடும் பூமி என்னும் நங்கை , தன் கொங்கை ஆர.
- பரிபாடல்: பூத்தனள் நங்கை பொலிக என நாணுதல்
- சிலப்பதிகாரம்:அது கேட்டு கடல் சூழ் இலங்கைக் கயவாகு என்பான் நங்கை க்கு
- சிலப்பதிகாரம்:என்னுட னங்கையீங் கிருக்கெனத் தொழுது
- சீவக சிந்தாமணி:நாத் தழும்ப ஏத்தித் தவ நங்கை அவர் நண்ணித்
- சீவக சிந்தாமணி:நங்கை யென்னொ டுரையாய் நனியொல்லே
- திருக்குற்றாலம் பாடல்கள்: நங்கை மார் குரவையொலிப் பொங்குமா கடலே.
- திருப்புகழ்: மொருபுடை பச்சை நங்கை யோடுற்று ...... முலகூடே
- திருமந்திரம்:ஏடு அம் கை நங்கை இறை எங்கள் முக் கண்ணி
- திருமந்திரம்:ஆரிய நங்கை அமுத பயோதரி
- வில்லிபாரதம்: "நன்றி இல் மனிதன்" என்று இங்கு இகழ்வதோ நங்கை ?' என்றான்.
- மணிமேகலை:நம்பிக்கு இளையள் ஓர் நங்கை யைக் கொடுத்து
- பெரியபுராணம்:நங்கை அவள் தணை நயந்த நம்பியோடு நானிலத்தில் இன்புற்று வாழும் வண்ணம்
- பாரதியார் பாடல்கள் : ஞான வொளி வீசுதடி, நங்கை நின்றன் சோதிமுகம்
- பதினோராம் திருமுறை: இமையா நெடுங்கண் உமையாள் நங்கை யும்
- தேவாரம்: மாடு அடுத்த மலர்க்கண்ணினாள் கங்கை நங்கை யைத்
( மொழிகள் ) |
சான்றுகள் ---நங்கை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி