நவ்வி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

நவ்வி(பெ)

  1. மான்
  • நாயின் வாயின்நீர் தன்னை நீர்எனா நவ்வி நாவினால் நக்கி விக்குமே (கலிங்கத்துப்பரணி)


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. deer

(இலக்கியப் பயன்பாடு)

  • கம்பராமாயணம்: நவ்வியின் ஒதுங்கி இறை நாணி, அயல் நின்றாள் - மருண்ட மானைப் போல ஒரு புறத்தில் விலகி நாணி அருகில் நின்றாள்.
  • புறநானூறு: (2) சிறு தலை நவ்விப் பெருங் கண் மாப் பிணை, அந்தி அந்தணர் அருங் கடன் இறுக்கும் முத் தீ விளக்கின், துஞ்சும் பொற் கோட்டு இமயமும், பொதியமும், போன்றே - இமயம் பொதியம் ஆகிய மலை அடுக்கத்தில் அந்தணர் வளர்க்கும் முத்தீ விளக்கொளியில் நவ்வி-மான்கள் உறங்குவது போல அச்சமின்றி உன் மக்கள்-சுற்றம் நிலைகொள்வதாகுக.
சொல் வளப்பகுதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=நவ்வி&oldid=1885992" இருந்து மீள்விக்கப்பட்டது