நாஞ்சில்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
நாஞ்சில்(பெ)
- கலப்பை
- மதிலுறுப்பு
- வள்ளுவன் என்ற தலைவற்கு உரியதாயிருந்த ஒரு மலை.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- நாஞ்சிற்படையோன் - Bala Rama, using a plough for his weapon
- பாரதத்தின் தென்கோடி மாவட்டம் கன்னியாகுமரி. அதன் வடபுலத்து நஞ்சைப் பிரதேசம் நாஞ்சில் நாடு. நாஞ்சில் எனில் கலப்பை. அதுவே என் புனைப்பெயர் காரணம். (சாகித்ய அகாதமி விருது புகைப்படமும், நாஞ்சில் உரையும், நாஞ்சில்நாடன்)
(இலக்கியப் பயன்பாடு)
- நாஞ்சி லொப்ப (புறநா. 19).
- தசும்புடைக் கனகநாஞ்சில் (கம்பரா.கடறாவு. 90).
- நாஞ்சிற் பொருந (புறநா. 137).
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---நாஞ்சில்--- DDSA பதிப்பு + வின்சுலோ +