நீரெலி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
அமெரிக்க நீரெலி
ஐரோப்பிய நீரெலி
நீந்தும் நீரெலி

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

நீரெலி, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. நீரிலும், நிலத்திலும் வாழும் ஓர் உயிரினம்.

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. beaver

விளக்கம்[தொகு]

  • நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய, இரவு நேரப் பிராணிகளான, இவைகளின் தாயகம் வட அமெரிக்காவும், ஐரோப்பாவுமாகும்...ஆகவே இவற்றில் இந்த இரு இனங்களுண்டு...நீரெலிகள் ஆற்றில் அணைகட்டி குளம்போல அமைத்து அங்கு சிறு தடிகள்,சுள்ளிகள், தாவரங்கள் போன்றவற்றை கொண்டு தங்களது வீடுகளை அமைத்து வாழும். உலகில் இரண்டாவது பெரிய கொறித்துத் தின்னும் உயிரினம்...இவை தங்கள் வாழ்நாள் முழுதும் வளர்கின்றன... பெண் நீரெலிகள் ஆண்கள் அளவுக்கோ அல்லது அவற்றிலும் பெரிதாகவோ வளர்கின்றன...
  • உணவுக்காகவும், உரோமத்திற்காகவும் மற்றும் மருத்துவத்திலும், வாசனைப் பொருட்கள் தயாரிப்பிலும் பயன்படும் இவைகளின் சுரப்பிகளுக்காகவும் பெருமளவு வேட்டையாடப்பட்டு இவற்றின் என்ணிக்கை வட அமெரிக்காவில் வெகுவாகக் குறைந்துவிட்டது...ஐரோப்பாவில் தற்போது மிக அதிகமாக உள்ளன...இவை தங்கள் இருப்பிடங்களைக் கட்டிக்கொள்ள மரங்களை வீழ்த்தும் வேகமும், ஓடும் நீர்நிலைகளில் இவைகள் கட்டும் அணைக்கட்டுகளால் நீரோட்டம் தடைப்பட்டு ஏற்படும் வெள்ளமும் இந்த விலங்கை ஒரு தொல்லை தரும் உயிரினமாகக் கருத வைத்துவிட்டது...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---நீரெலி--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=நீரெலி&oldid=1219395" இருந்து மீள்விக்கப்பட்டது