நீர் முள்ளி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
நீர் முள்ளி

தமிழ்[தொகு]

(Asteracantha longifolia /Hygrophila auriculata...(தாவரவியல் பெயர்))

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

நீர் முள்ளி, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. மூலிகைச் செடி வகைகளுள் ஒன்று.
  2. நன்செய் நிலக்களைச்செடிகளில் ஒன்று.
  3. நீர் முள்ளி உடலின் எடை குறைக்கும் தன்மை கொண்டது.

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. Asteracantha Longifolia
  2. a herbal plant.
  3. a common weed in wet land.

விளக்கம்[தொகு]

மருத்துவ குணங்கள்[தொகு]

நீர்முள்ளிச் செடியால் பாண்டு, குளுப்பை, நீர்க்கோவை, மூத்திரச் சிக்கல், சர்வசோபை ஆகிய நோய்கள் விலகும்...

உபயோகிக்கும் முறை[தொகு]

நீர்முள்ளி இலை அல்லது சமூலத்தை ஒன்றுக்கு இருபது எடை நீர் விட்டு நாலில் ஒன்றாகக் காய்ச்சி வடிகட்டி வேளைக்கு அரையிலிருந்து ஓர் அவுன்சு அளவு தினமும் இரண்டு வேளை கொடுப்பார்கள். அல்லது புதியதாக நிழலில் உலர்த்திய ஐந்து உரூபாய் எடை நீர்முள்ளி இலையை ஒரு சாடியிலிட்டு மூன்று ஆழாக்கு காடிவிட்டு மூன்று நாள் கழிந்தபின் வடிகட்டி வேளைக்கு அரை முதல் ஓர் அவுன்சு அளவு சிறிது சுத்தமான நீருடன் கூட்டித் தினமும் மூன்று வேளை உட்கொள்வர்...இதனால் பாண்டு, சோகை, காமாலை, வயிற்றிலுள்ள கட்டி, மகோதரம் ஆகிய நோய்கள் போகும்...சிறுநீர் தாராளமாக வெளியேறும்...நீர்முள்ளியின் சமூலச் சாம்பலைச் சிறுநீரிலாவது, கோமயத்திலாவது கரைத்து வீக்கமுள்ள இடங்களில் தழும்பப் பூசிவந்தால் வீக்கத்தைக் குறைக்கும்...இந்த மூலிகை இரத்தத்திலுள்ள மாசுகளை நரம்புகளின் வழியே குண்டிக்காய்க்குக் கொண்டுவந்து, பிறகு நீர்ப்பை, நீர்த்தாரை மூலமாக வெளியாக்கும்...மேலும் நீர்த்தாரையிலுள்ள மாமிச வளர்ச்சி, சவ்வு, கல் ஆகியவைகளை விரைவில் கரைத்து நீரடைப்புநோயைக் குணப்படுத்தும்...அந்த நீர்த்தாரையிலுள்ள அழலையும் ஆற்றும்...இந்த மூலிகையைக்கொண்டு நீர்முள்ளி எண்ணெய் தயாரித்தும் பயன்படுத்துவர்...( மொழிகள் )

சான்றுகள் ---நீர் முள்ளி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=நீர்_முள்ளி&oldid=1218323" இருந்து மீள்விக்கப்பட்டது