நெடுநல்வாடை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • நெடுநல்வாடை, பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

நூலின் வகை[தொகு]

தொகை நூல்கள்[தொகு]

நூலின் அமைப்பு[தொகு]

  • இந்நூல் 188 அடிகள் கொண்ட நேரிசை ஆசிரியப்பா என்னும் பாடலால் யாக்கப்பெற்றுள்ளது. கூடுதல் செய்திகளுக்கு: தமிழ்ப் பணி மன்றம் வலைப்பூ காண்க : https://thamizppanimanram.blogspot.com/

நூலின் பெயர்க்காரணம்[தொகு]

  • அரசமாதேவிக்கு நெடிய துன்பம் தந்த வாடைக் காலம், போருக்குச் சென்ற அரசனின் வெற்றிக்குக் காரணமான நல் வாடைக் காலமாக அமையப் பெற்றதால், நெடுநல்வாடை என்று இந்நூலுக்குப் பெயர் வரலாயிற்று என்பர் சான்றோர் !

நூலின் பகுப்பு[தொகு]

  • வாடைக்காலத் துன்பம், கூதிர்க்கால விளைவுகள், அரசியின் அரண்மனை, அந்தப்புரத்தின் அமைப்பு, அரசியின் வருத்தம், பாசறையில் பாண்டியன் நெடுஞ்செழியனின் நிலை என்று பகுத்துக் கொண்டு பாடப்பெற்றுள்ளது.

நூலை இயற்றியவர்[தொகு]

  • இந்த நூலை இயற்றியவர் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் ஆகும்.

நூலின் காலம்[தொகு]

  • இந்நூல் கி.பி.2-ஆம் நூற்றாண்டு வாக்கில் தோன்றியது என்பார் நான்றோர்.
மொழிபெயர்ப்புகள்

விளக்கம்[தொகு]

  • நிகழ்வுகள் வாடைக்காலத்தில் நடைபெறுவதாலும், தலைவிக்கு இது நீண்ட (நெடு) வாடையாகவும், போர் வெற்றியைப் பெற்ற பாசறையின்கண் இருக்கும் தலைவனுக்கு இஃது ஒரு நல்ல வாடையாகவும் அமைந்தது குறித்தே இது நீண்ட நல்ல வாடை என்னும் பொருளில் நெடுநல்வாடை எனப் பெயர் பெற்றதாகக் கூறுவர்.
Nohat-logo-X-ta new.png
விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://thamizhppanimanram.blogspot.com/2019/10/07-ilakkiyam.html

"https://ta.wiktionary.org/w/index.php?title=நெடுநல்வாடை&oldid=1929064" இருந்து மீள்விக்கப்பட்டது