பகுப்பு பேச்சு:ஆங்கிலம்-தடைய அறிவியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தடைய அறிவியல் என்றால் என்ன? --செல்வா 13:09, 1 ஜூன் 2010 (UTC)

  • forensics அல்லது forensic science என்று நினைக்கிறேன். பழ.கந்தசாமி 14:57, 1 ஜூன் 2010 (UTC)
அப்படியென்றால் தடயவியல் அல்லது தடய அறிவியல் என்றிருந்தாலாவது சற்று பொருந்தி வரும். தடயம் வேறு தடையம் வேறு. தடையம் என்றால் எதிர்ப்பு தருவது, முட்டுக்கட்டையாக இருப்பது. மின்தடையம் என்றால் மின்னோட்டத்துக்கு தடை தருவது (electrical resistance). தடயம் என்றால் தடம் (=வழி) என்பதில் இருந்து leading evidence, leading intelligence என்னும் பொருள் தரும்.--செல்வா 15:11, 1 ஜூன் 2010 (UTC)
  • தடயவியல் என்றால் புவியியல், உயிரியல், மொழியியல் போன்று இனிமையாக ஒலிக்கும்.--George46 15:15, 1 ஜூன் 2010 (UTC)
  • தடையம் என்பதில் தடயம் அடங்குகிறது. வழியை (தடம்) விட, குற்றங்களை கண்டறிவதற்கான தடைகளைத் தாண்டும் இயல் என்றே நான் உணருகிறேன். மேலும் தராசு தட்டிற்கும், ஆபரணங்கள், கத்தியின்பிடியினையும், களவுமுதலிய குற்றங்களிற் சம்பந்தப்பட்ட பொருள் என்பதனையும் தடையம் குறிக்கிறது.
தடயமோ, களவுபோய்த் திரும்பிக்கிடைத்த பொருள் என்பதனை மட்டுமே குறிக்கிறது. ஆகையால்,
தடைய அறிவியல் என்று சுந்தர் இங்கு அறிமுகப்படுத்திய சொல், நற்சொல்லே ஆகும்.
(ஆதாரங்கள்-சில இணைய தமிழ் அகரமுதலிகள்){த*உழவன் 00:26, 2 ஜூன் 2010 (UTC)}

த*உழவன், தடையம் வேறு தடயம் வேறு. வ'ப்'ரீசியசு (Fabricius) அகராதி தரும் "same as தடயம்." என்னும் கருத்து தவறு. தடம் என்பது வழி. தடை என்பது எதிர்ப்பு, மறுப்பு, தடுத்து நிறுத்துவது. தடையம் என்றால் ஆங்கிலத்தில் Resistance. நீங்கள் கூறும் "வழியை (தடம்) விட, குற்றங்களை கண்டறிவதற்கான தடைகளைத் தாண்டும் இயல் என்றே நான் உணருகிறேன்" என்பது தவறான கருத்து. திருத்திக்கொள்ளுங்கள்.தடம் என்பது குற்றங்களைக் காட்டும் வழி, குற்றம் நடந்தத்தற்கான சான்றுக்கூறுகள் தரும் வழி என்னும் பொருளில் பயன்படுகின்றது. தடயம் ஏதும் கிடைத்ததா என்று கூறுவதில், குற்றம் நடந்த வழிக்கான சான்றுக்கூறுகள் ஏதும் கிடைத்ததா என்று பொருள். தராசுத்தட்டில் வைப்பது ((தடைக் கல்)எதிர்த்து நிற்பது, மறித்து நிற்பது என்னும் பொருளில் வழங்குகின்றது. கத்தி கைப்பிடி வரை உள்ளே பாய்ந்தது என்பதும், தடுப்பு வரை பாய்ந்தது என்பதைக் குறிக்கும். தடயம் என்பது தடம் என்பதன் வழியதான சொல். தடம் என்றால் வழி. கால்தடம் பதிந்து உறுவான பாதை. தொடருந்து தடம் புரண்டது என்றால் தன் இருப்புப்பாதை வழியில் இருந்து விலகியது என்று பொருள். த்டயம் என்பது, குற்றம் பற்றிப் பேசும்பொழுது, குற்றவாளி விட்டுச்சென்ற குற்றத்துக்கான சான்றுக்கூறுகள் இருப்பதைக் குறிக்கும். சுந்தர் அறிமுகப்படுத்தினார் என்றால் அவரைக் கேட்டுப்பாருங்கள் மேலே நான் கூறியவை சரியா என்று. தடையம், தடம் ஆகிய இரண்டுக்கும் அடி ஆழத்தே தொடர்பு உண்டு. தட்டுப்படுதல், தடவுதல் முதலான பொருள்கள் (அவை), ஆனால் தடையம் என்னும் சொல்லும், தடம் (தடயம்) என்னும் சொல்லும் இவ்வடிவங்களில் தெளிவாக வேறான பொருள் தருவன. தடயத்துக்குத் த்டையம் என்று கூறினால் மிகவும் குழப்பம் உண்டாகும். தடையம் என்னும் சொல் forensics என்பதற்குத் தவறான சொல். தடயவியல் என்பது பொருந்தும் சொல். மாற்ற வேண்டியது தேவை.--செல்வா 13:13, 2 ஜூன் 2010 (UTC)