பந்தா
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பந்தா (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- தமிழ்ச் சொல்லாக்க அகரமுதலிகள் துறைத் தலைவர், பேராசிரியர் ப.அருளி அவர்கள், தமது ‘அயற்சொல் அகராதி’யில் பந்தா Panthah எனும் சொல்லின் வேர்ச்சொல் சம்ஸ்கிருதம் என்றும், அதன் பொருள் வழி, வழிமுறை, அடம்ப வீம்பு என்றும் குறிக்கிறார். (பந்தா, நாஞ்சில் நாடன்)
பயன்பாடு
- சில முக்கியப் புள்ளிகள் விழாவில் பங்குபெற வந்தால், விலைமதிப்பற்ற வெளி நாட்டுக் கார், அதிவேகமுடன் அரங்கின் முகப்பு வாசலில் வந்து நிற்கும். ஓட்டுநர் இறங்கி, காரைச் சுற்றிக்கொண்டு ஓடி வந்து கதவைத் திறந்து பிடித்துக்கொண்டு நின்றபிறகே பிரமுகர் இறங்குவார். விழா அமைப்பாளர், ‘நீ இறங்காவிடின் நிம்மதி ஏது?’ என்று பாடிக்கொண்டு நிற்பார். விழாவுக்கு வரும் நம் போன்ற சாதாரண மக்களுக்கு நடக்க [இடைஞ்சல்|இடைஞ்சலாக]], விழா முடிந்து போகும்வரை, பிரமுகரின் கார் அங்கேயே நிற்கும், பந்தாவாக! (பந்தா, நாஞ்சில் நாடன்)
- தனியார் துறை அதிகாரிகளும் வெகு பந்தா உடையவர்களே! பின்னால் கை நீட்டினால் எடுக்கும் தோதில் இருந்த தண்ணீர் நிறைந்த கண்ணாடி டம்ளரை எடுக்க, மணி அடித்து ஊழியரை அழைத்ததைக் கண்டேன். (பந்தா, நாஞ்சில் நாடன்)
- பந்தாவுக்கு எதிர்ச்சொல் என்னவாக இருக்கும்? எளிமை, இயல்பு அடக்கம்! (பந்தா, நாஞ்சில் நாடன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பந்தா--- DDSA பதிப்பு + வின்சுலோ +