பயனர்:சொல்லாக்கியன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஓரெழுத் தொருமொழி ஈரெழுத் தொருமொழி இரண்டிறந் திசைக்கும் தொடர்மொழி உளப்பட மூன்றே மொழிநிலை தோன்றிய நெறியே.

( தொல். எழு.மொழிமரபு. நூற்பா. 45)

ஒரு எழுத்தாலான சொற்கள், இரண்டு எழுத்துகளாலான சொற்கள், இரண்டு எழுத்துகளுக்கு மேலான ஒலிகளைக் கொண்ட தொடர்ச்சொற்கள் ஆகியவையே, தமிழ்ச்சொற்கள் உருவாக்கத்தின் அடிப்படை. எனவே, எல்லாச் சொற்களையும், அவற்றின் பகுதிகளாக, ஒரு எழுத்துச் சொற்களாகவோ, இரண்டு எழுத்துச் சொற்களாகவோ, தொடர்மொழிகளாகவோ பிரித்து, பொருள் காணலாம். முதன்மைப் பொருளைக் கண்ட பிறகு, குறிப்புப் பொருட்களையும் கண்டறியலாம்.

புதிய சொற்களை உருவாக்கவும், இவ்விதியைப் பயன்படுத்தலாம். அதாவது, ஒரு எழுத்தாலான சொற்கள், இரண்டு எழுத்துகளாலான சொற்கள், இரண்டு எழுத்துகளுக்கு மேலான ஒலிகளைக் கொண்ட தொடர்ச்சொற்கள் ஆகியவற்றைக் கொண்டு, எண்ணிறந்த சொற்களை உருவாக்கலாம்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்:சொல்லாக்கியன்&oldid=1893840" இலிருந்து மீள்விக்கப்பட்டது