பயனர் பேச்சு:ச.பிரபாகரன்/common.js

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
  1. உங்களது இரண்டு ஆக்கங்களையும் பயன்படுத்த முயன்ற போது, இரண்டிற்கும் , ஒரே மாதிரியான ஆழிகளேத் தோன்றுகின்றன.--தகவலுழவன் (பேச்சு) 11:26, 23 மார்ச் 2014 (UTC)
சற்று விளக்க முடியுமா தகவலுழவனாரே. எப்படி மாற்றவேண்டும் என்று எண்ணுகிறீர்களோ அப்படி மாற்றிவிடலாம். --ச.பிரபாகரன் (பேச்சு) 00:35, 26 மார்ச் 2014 (UTC)
குழப்பிவிட்டேனா! மன்னிக்கவும். உங்களின் படைப்பு தற்போது 2ஆக பிரிந்து விட்டதல்லவா? அவ்விரண்டையும் ஒருசேர பயன்படுத்த இயலவில்லை. அதற்கு தான் மேலுள்ள எனது பக்கத்தைக் காட்டினேன். தற்போதுள்ள நிலையில் ஏதாவது ஒன்றைத்தான்( இதுபோல) பயன்படுத்த முடிகிறது. பிரபா! என்னை தகவலுழவன் என்றே அழையுங்கள்! மற்றொரு சிறு குறிப்பினைத் தரவிரும்புகிறேன். கோப்பின் பெயரை எங்கு வைத்தாலும் புள்ளிகளோடு வைக்க வேண்டாம். அதற்கு பதில் ஒரு இடைவெளியோடு அமையுங்கள். அதனைவிட ஒரு - குறியீடு இன்னும் சிறப்பு. மீடியாவிக்கியில் அதனை பல இடங்களில், இவ்விதியைப் பின்பற்ற சொல்கின்றனர்.
(எ. கா.) பிரபாகரன் ச () பிரபாகரன்-ச ஆனால், எல்லா கருவிகளும் இலத்தீனிய எழுத்துக்களில் தான் தடையின்றி செயல்படுகிறது. பல கருவிகள் தமிழ் போன்ற பெயர்களில் செயற்பட வழுப்பதிவு செய்யவேண்டியுள்ளது என்பது மீடியாவிக்கியின் வளர்ந்து வரும் சூழலாக உள்ளது. நீங்கள் ஏறத்தாழ 3000 பங்களிப்புகளைச் செய்துள்ளீர்கள். இக்கருவிகூட முன்பு செயற்படாமல் இருந்தது. நம் நிலைபற்றி தெரிந்து கொள்வதற்காக, இதனைத் தெரிந்து கொள்வதற்காகக் கூறினேன். --தகவலுழவன் (பேச்சு) 02:39, 26 மார்ச் 2014 (UTC)
நீங்கள் பயனர்:ச.பிரபாகரன்/whitespaceTamil99.js(விக்கிமீடியா ஆழி) என்பதனை அமைக்க, பயனர்:ச.பிரபாகரன்/wikt.js(விக்சனரி ஆழி) என்பதிலிருந்து, பிரித்தெடுக்கவில்லை போலிருக்கிறது. ஒரு நகலெடுத்து, விக்கிமீடியா ஆழியை உருவாக்கியிருக்கிறீர்கள். அப்படிதானே? --தகவலுழவன் (பேச்சு) 12:24, 26 மார்ச் 2014 (UTC)
ஆம், பிரித்தேடுக்காமல் நகல்மட்டும் எடுத்தேன். அதுதான் பிரச்சனை செய்தது. தற்பொழுது நீக்கிவிட்டேன். வேலை செய்கிறது. --ச.பிரபாகரன் (பேச்சு) 13:08, 26 மார்ச் 2014 (UTC)

──────────────────────────────────────────────────────────────────────────────────────────────────── மகிழ்ச்சி. நான் ஏற்கனவே கூறியபடி, பயனர்:ச.பிரபாகரன்/whitespaceTamil99.js என்ற உங்களின் நிரலாக்கத்தினை பிறரிடம் வெள்ளோட்டம் இட்டு , கருத்திடக் கூறுவதற்கு முன், ஒன்றை, நாம் கருத்தில் கொள்ளவேண்டுமென்று எண்ணுகிறேன். அவர்கள் பக்கத்தில் ஏற்கனவே, வேறு ஏதாவது ஒரு நிரலாக்கம் இருக்கலாம். அதனால் ஏதேனும் இடர் வருமா? எடுத்துக்காட்டாக, நான் அமைத்துள்ள, பயனர்:தகவலுழவன்/common.js என்ற பக்கத்தினைப் பார்க்கவும். மேலும், w:பயனர்:தகவலுழவன்/common.js என்ற பக்கத்தினையும் பார்க்கவும். பிறர் நிரலால் ஏற்படும் இடர், உங்கள் ஆக்கத்தின் மதிப்பை குறைத்துவிட வாய்ப்புள்ளதால், இந்த ஐயத்தைக் கேட்கிறேன். தங்களது ஆக்கத்திற்கு, wikt2, விக்சனரி2 என பெயர் மாற்றலாமா? ஏனெனில், எனது பயனர்:தகவலுழவன்/common.js பக்கத்தில் மூன்று வரிகள் இருக்கிறது. இதனாலோ என்னவோ, எனது ஆழிகள் சரியாக இயக்க முடியவில்லை. --தகவலுழவன் (பேச்சு) 17:28, 26 மார்ச் 2014 (UTC)