பயனர் பேச்சு:Inbambot

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

முன்மொழிவுகள்[தொகு]

  1. இன்பம்குமார், மீண்டும் முனைப்புடன் பங்காற்றுவதற்கு நன்றி. சென்னைப் பேரகரமுதலியின் சொற்களைச் சேர்க்கிறீர்கள் என நினைக்கிறேன். சொற்களுக்கு அதில் பல பொருட்கள் தரப்பட்டிருந்தால், தவறாமல் அனைத்துப் பொருளையும் சேர்க்கவும். நன்றி. எடுத்துக்காட்டு: அரசநீதி. பழ.கந்தசாமி (பேச்சு) 14:07, 29 மே 2012 (UTC)[பதிலளி]
  2. அருக்குதல் என்ற சொல்லில், சில மாற்றங்களை செய்துள்ளேன்.மேலும், கதிர்வேல்பிள்ளை அகரமுதலியில், நீங்கள் இணைத்துள்ள பொருள் வரவில்லை. ஏன் என்று ஒருமுறை காணவும். பொதுவாக அனைத்து விக்சனரிகளிலும் பின்பற்றப்படும் விதிகளை நாமும் இங்கு கையாண்டால் நன்றாக இருக்கும். இல்லையெனில் வெறும் எண்ணிக்கைக்காக நாம் செயல்பட்டதாக, பிறர் நினைக்க வாய்ப்புண்டு. நம் தாய்மொழி தமிழில் உருவாக்கப்படும் சொல், மற்ற மொழிகளின் சொற்களை விட, சிறந்த தரவுகளை பெற்றிருத்தல் அவசியம்.அதற்காக தமிழ் இலக்கியங்களிலும் தேடும் திறனுள்ள, இணைய இணைப்பில்லா வகையில் செயல்பட வல்ல, ஒரு நிரலி எழுதப்பட்டு வருகிறது. அது நங்கை என்ற சொல்லை போல, இலக்கியத் தரவுகளைத்தரும்.அது குறித்து உங்களின் கருத்தையும் கூறவும்.
எனது அனுபவத்தில் பின்வருவனவற்றை நாம் தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.
  • 500பைட்டுகளுக்கு மேல் இருப்பின் மேல்விக்கியால் சிறப்பாக குறிக்கப்படுகிறது.
  • ஒவ்வொரு பகுப்புக்கும் ஏறத்தாழ 90பைட்டுகள் வரும்.பெரும்பாலானவை பெயர்ச்சொற்களிலேயே அடங்குகிறது.
  • பொருள் பகுதியிலும், மொழிபெயர்ப்பு பகுதியிலும் உள்ள சொற்களை, விக்சனரியில் உள்ள சொற்களோடு இணைக்க(internal links) வேண்டும்.
  • hash குறியீட்டை பயன்படுத்துவதன் மூலம், தமிழுக்குரிய மொழியாக்கத்தை, எளிமையாக மொழிபெயர்ப்புப் பகுதியில் காணலாம்.
  • {{சொல் வளப்பகுதியை முடிந்தால் இணையுங்கள் இல்லையெனில் விட்டு விடலாம்.காலியாக விட வேண்டாம்.
  • பழ.கந்தாசாமி உருவாக்குவது போல, தமிழில் விளக்கம், ஆங்கில விளக்கம், மேற்கோள்கள், சொல்வளப்பகுதி போன்றவற்றை உள்ளடக்கினால், தமிழ் சொல் சிறக்கும்.

அலைப்பேசிப் பயன்பாடு எதிர்காலத்தில், அதிகமாகும். அதிலிருந்த படியே, தமிழ் விக்சனரிக்கு பலரை செயல்பட வைக்க எத்தகைய வடிவமைப்பு இருக்கு வேண்டும் என்பது குறித்தும் உங்கள் கருத்தினை இடவும். மற்றவை உங்கள் கருத்துக் கண்டு, --17:28, 29 மே 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Inbambot&oldid=1103294" இலிருந்து மீள்விக்கப்பட்டது