பயனர் பேச்சு:Shrikarsan/விக்சனரி 3.js

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


இதுவரை உங்கள் பேச்சுப்பக்கத்தில் ஆலோசித்தோம். இனி இப்பக்கத்திலேயே தொடராமென்று எண்ணுகிறேன். இந்த ஆழியின் அமைப்பானது, அனைத்து விக்சனரிகளுக்கும் உதவ வேண்டும் என்பதே ஆகும். இந்த நோக்கத்தில் தொடங்கிய நாம், சற்று வழிமாறி விட்டோம் என்றே எண்ணுகிறேன். ஏனெனில், {{subst:noun-ta||} என்பதை இதனுடன் இணைத்துள்ளோம். அதனை நீக்கக் கோருகிறேன். இது பல சொற்களைத் தேடி, தேவையான மாற்றத்தை தரவல்லதாக இருக்க வேண்டும். அப்பொழுதே பல மொழிகளுக்கும் பயனாகும். இங்கு பார்த்தீர்கள் என்றால் பன்மொழி அகரமுதலிகள் உள்ளன. அவற்றை அந்தந்த மொழி விக்சனரிகளுடன் இணைக்க இது மிக மிக அவசியம். இதிலுள்ள தரவுகளை, விக்சனரியாக்கம் செய்யும் போது, இந்த சொற்களைத் தேடி மாற்றுக ஆழி மிக மிக உதவும்.

find1--->replace1(எண்களை, #குறியீடுகளாக மாற்றுவது)
find2--->replace2(;| வந்தால், அதனை | என்று மட்டும் மாற்றுவது)
find3--->replace3(.( வந்தால், முன்னுள்ள புள்ளியை நீக்கிவிட்டு, ( அடைப்புக்குறியை மட்டும் இடுவது)
find4--->replace4 (). வந்தால், பின்னுள்ள புள்ளியை நீக்கிவிட்டு, ) அடைப்புக்குறியை மட்டும் இடுவது)
இப்படி ஒரு பட்டியலே, எளிமையான மாற்றப்பட்டியலாக ஏற்படுத்தலாம்.

இந்த நோக்கத்தில், மேலும் சிறப்பாக மாற்ற, சில தேவைகளைக் கீழ்கண்டவாறு கூறலாம்.

  • காற்புள்ளியை வைத்து ஆங்கில விளக்கத்தையும், அதற்குரிய (தமிழ்)மொழிவிளக்கத்தையும் பிரித்தீர்கள்.
  • அடுத்து (தமிழ்) மொழிவிளக்கத்தில், முதலில் வரும் முற்றுப்புள்ளியை #:(எ. கா.) ஆக மாற்ற அமைத்தீர்கள்.

மற்றவை உங்கள் எண்ணங்கண்டு, ஆவலுடன்..--தகவலுழவன் (பேச்சு) 08:08, 23 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

தேவைப்படும் மாற்றம்-1[தொகு]

  1. எடுத்துக்காட்டு வாக்கியமாக, கீழுள்ளதைக் கொள்ளவும்:-
    • Retort ; reply ; பதிற்சொல். சங்கத்தார்க்கு ஒரு போதும் எதிர்வார்த்தை சொல்லார்களே. (தமிழறி. 32).
    • தற்போதுள்ள 3வது ஆழியானது. மேலுள்ள reply க்கு அடுத்து ஒரு நெடுங்குத்துக்கோட்டினை இடுகிறது. மகிழ்ச்சி. ஆனால், Retort ; என்பதன் காற்புள்ளியையும் நீக்க விடுகிறது. மேலேசொன்னது போல, படிவக்குறிப்புகளையும் நீக்கவிடுக.--தகவலுழவன் (பேச்சு) 08:22, 23 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

தமிழ் இணையக் கழகத்திற்குத் தொடுப்பு[தொகு]

வார்ப்புரு:சென்னைபேரகரமுதலி பெரும்பான்மையான தமிழ் சொற்களில் அமைந்துள்ளது. இதனைச் சொடுக்கினால், அச்சொல்லிருக்கும், சென்னைப்பேரகரமுதலியின் பக்கத்தைக் காட்டும். அதே போல, தமிழ் இணையக்கல்விக் கழகத்தின் சொல்லிருக்கும் பக்கத்தினை, ஆங்கிலச் சொற்களுக்குக் காட்ட இயலுமா? முன்பு உங்களின் இந்த நிரல்பக்கம் காட்டியதாக நினைவு. ஆவலுடன்..---- உழவன்+உரை.. 08:15, 7 மே 2015 (UTC) [பதிலளி]