உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Sriveenkat

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தனி நபர் பக்கங்கள்

[தொகு]

விக்சனரி ஓர் அகராதி ஆகும். அகராதியில் தனிநபர்களுக்கு பொருள் விளக்கம் அளிக்கும் மரபு இல்லை. எனவே, நீங்கள் உருவாக்கிய நபிகளின் பக்கங்கள் அனைத்தையும் நீக்கப் பரிந்துரைத்துள்ளேன். - CXPathi (பேச்சு) 13:35, 25 மே 2023 (UTC)Reply

வணக்கம்@CXPathi, தனி நபர்கள் பக்கங்களை இந்தத் திட்டத்தில் உள்ளன ஆதலால் தான் உருவாக்கினேன்
உதாரணம் இயேசு. இதை நீங்கள் தெளிவுபடுத்தினால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணுகிறேன். நன்றி Sriveenkat (பேச்சு) 14:59, 25 மே 2023 (UTC)Reply
அண்ணா மன்னிக்கவும். en:Wiktionary:NAMES பக்கத்தை இப்போது தான் பார்வையிட்டேன். தனிநபர் பெயர்களையும் proper noun ஆக கொள்ளலாம் எனத் தெரிகிறது. எனவே, நான் நேற்று இட்ட நீக்க வேண்டுகோள் அனைத்தையும் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன். மேலும் இந்நிகழ்வுக்காக வருத்தம் தெரிவித்து, மீண்டும் ஒருமுறை மன்னிப்பு கேட்கிறேன். - CXPathi (பேச்சு) 06:29, 26 மே 2023 (UTC)Reply
@CXPathi மன்னிப்பெல்லாம் தேவையற்றது நண்பரே!, ஒவ்வொரு பங்களிப்பாளர்களும் தனது நேரங்களை செலவிட்டு இத்திட்டத்தை வளர்த்து எடுக்கின்றனர். நான் இப்பொழுது பன்மொழி சொற்களை விக்சனரியில் ஏற்றிக்கொண்டு வருகிறேன், நான் ஏதாவது தவறு செய்தால் தெரிவியுங்கள் மற்றும் அதை துப்புரவு செய்யுங்கள் நான் ஏதாவது தவறு செய்தால் திருத்திக் கொள்ள நான் கடமைப்பட்டுள்ளேன் நன்றி! Sriveenkat (பேச்சு) 06:38, 26 மே 2023 (UTC)Reply

தமிழாக்கம் தவறு

[தொகு]

누나 என்பதன் தமிழ் மொழிபெயர்ப்பு தவறு. எ-கா ஆணின் எதனால் என்பதனை இலக்கண அடிப்படையில் புரிந்து கொள்ள முயலுங்கள். உழவன் (உரை) 01:16, 27 மே 2023 (UTC)Reply

தவறை காட்டியமைக்கு நன்றி. பிழை திருத்தப்பட்டது. Sriveenkat (பேச்சு) 03:15, 27 மே 2023 (UTC)Reply

proper noun -- முறையான விக்கி வடிவம்

[தொகு]

முறையான விக்கி வடிவம் என்பது நாம் கொடுப்பது தான். பொதுவாக, நீங்கள் குறிப்பிடும் வடிவத்தில் விக்சனரியில் பார்த்தால் [ஆங்கில விக்சனரி உள்பட] பல தலைப்புகளுக்கு பிறகு பொருள் அல்லது meaning or synonym கீழே இருக்கும்; சரியாகச் சொன்னால், அவற்றைத் தேட வேண்டும் (விசைப் பலகையில் page down செய்து பார்க்க வேண்டி இருக்கும்). மற்ற அகராதிகளில் காணும் போது, மிக எளிய வடிவத்தில், அதாவது, இலக்கணக் குறிப்பு (தமிழிலும் ஆங்கிலத்திலும்) இடப்பட்டு, உடன் பொருள் மற்றும் வாக்கியப் பயன்பாடு கொடுக்கப்பட்டிருக்கும். எனவே, நாமும் [தமிழ் விக்சனரியில்] அவ்வாறு பயன்படுத்துவதால், எளிமையான வடிவத்தில் பொருளை அறிய உதவும். என் வரையில், நான் உள்ளீடு செய்யும் சொற்களுக்கு இந்த முறையைப் பயன்படுத்தி வருகின்றேன் -- சிலவற்றைப் பார்த்தால், அதன் எளிமையான வடிவம் உங்களுக்குப் புலப்படும். நன்றி. -- PARITHIMATHI (பேச்சு). 16:16, 31 ஆகத்து 2023 (UTC)Reply

விக்கி மாரத்தானில் பங்கேற்க அழைப்பு!

[தொகு]

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியாவின் 20ஆவது பிறந்தநாளை கொண்டாடும் வகையில், 'இணைய வழி' மாரத்தான் நிகழ்வொன்று தமிழ் விக்கிப்பீடியாவில் நடக்கவிருக்கிறது. கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம்! விக்கி மாரத்தான் 2023 - Selvasivagurunathan m (பேச்சு) 12:35, 18 செப்டம்பர் 2023 (UTC)

வணக்கம் @Selvasivagurunathan m கண்டிப்பாக கலந்து கொள்கிறேன். நான் விக்கிப்பீடியாவில் பேச்சு கட்டுரைகளை (Spoken Wikipedia Articles) உருவாக்க திட்டமிட்டு உள்ளேன். நீங்கள் விக்கிப்பீடியாவில் உள்ள சிறப்பான கட்டுரைகள் என்று நீங்கள் எண்ணும் கட்டுரைகளை எனக்கு பரிந்துரைக்கலாம். நன்றி Sriveenkat (💬) 06:45, 19 செப்டம்பர் 2023 (UTC)

உங்களின் பெயரை பதிவுசெய்தமைக்கு நன்றி. மேற்கொண்டு, தமிழ் விக்கிப்பீடியாவில் உங்களின் பேச்சுப் பக்கத்தில் உரையாடுகிறேன். - Selvasivagurunathan m (பேச்சு) 19:20, 19 செப்டம்பர் 2023 (UTC)

@Selvasivagurunathan m உங்கள் பதிலுக்கு ஆர்வமாக உள்ளேன். நன்றி Sriveenkat (💬) 03:35, 20 செப்டம்பர் 2023 (UTC)

புதிய வங்கச் சொற்களில் வழு

[தொகு]

স্ট্রবেরি என்ற சொல்லினைப் பார்த்தேன். ஆதாரங்கள் இணைப்பு முறிந்து உள்ளது. மேலும், தமிழில் தான் இணைப்பு மொழி இருக்க வேண்டும். அதாவது தலைப்பு மட்டுமே வங்க மொழியில் இருக்க வேண்டும். அச்சொல்லிக்கு நாம் தமிழில் இங்கு விளக்கம் தருகிறோம். சான்றுகள் பிற மொழியில் இருந்தால் எத்தகைய சான்று தருகிறீர்கள் என்பது இத்தமிழ் தளத்தில் செயற்படுபவருக்கு புரியாது அல்லவா?. எனவே உரிய மாற்றங்களை அனைத்திலும் தருக. உரிய சான்று தர இயலவில்லை எனில் இத்திட்ட மேன்மை மேலும் குறைந்துவிடும். ஆவன, ஆவணம் செய்ய கேட்டுக் கொள்கிறேன். உழவன் (உரை) 03:31, 29 அக்டோபர் 2023 (UTC)Reply

'லிங்குவா லிபரே' ஒலிப்புக் கோப்புகளை இணைத்தல்

[தொகு]

இந்த மாற்றங்களைப் பார்த்தேன். ஏற்கனவே இருக்கும் சொற்களுக்கு, ஒலிப்புக் கோப்புகளை இணைத்தலைத் தவிரக்கவும். ஏனெனில், பலரும் இதுபோல இணைத்தால் அப்பக்கம் எப்படி இருக்கும் என நினைத்துப் பாருங்கள். மேலும், ஒவ்வொரு கோப்புப்பக்கத்திலும் உள்ள இணைப்புகளில் மேம்பாடு தேவை. ஆலமரத்தடிகளில் அறிவிப்பு செய்து செயல்படுதல் நன்று. பலருக்கும் இது போல நுட்ப செயற்பாட்டை நீங்கள் மேற்கொள்வது தெரியும். உங்களுக்கும் அது நல்லது. எடுத்துக்காட்டாக, விக்கிப்பீடியாவின் ஆலமரத்தடியில், ஓரிரு நாட்களுக்குமுன், நான் கொடுத்த, இந்த அறிவிப்பினைப் பாருங்கள். உழவன் (உரை) 03:10, 27 நவம்பர் 2023 (UTC)Reply

fr:அம்மா Sriveenkat (💬) 05:00, 27 நவம்பர் 2023 (UTC)Reply
எதற்கு இந்த இணைப்பினைகொடுத்துள்ளீர்கள்? என்ன சொல்கிறீர்கள்? உழவன் (உரை) 10:21, 28 நவம்பர் 2023 (UTC)Reply
@Info-farmer நீங்கள் கூறுவது இப்போது எனக்கு புரிகிறது. ஏற்கனவே ஒலிக்கோப்பு தமிழ் விக்சனரி பக்கத்தில் இணைந்திருந்தால் நான் உருவாக்குவது இணைக்கப்பட மாட்டாது. நன்றி. அது Spell4Wiki டெலிகிராம் குழு என்பது எனக்கு தெரியும், அந்தக் கருவினை பயன்படுத்தி நாம் என்ன என்ன செய்ய முடியும் என்பதை ஓரளவு புரிந்து கொண்டவன். தற்போதைய எனது தொகுப்புகளை நான் திரும்பி பெற்றுக் கொள்ளட்டுமா? கருத்தைத் தெரிவிக்க. Sriveenkat (💬) 08:56, 1 திசம்பர் 2023 (UTC)Reply
சமூக ஊடகங்களில் பேசியதை, அங்கேயே பேசி விட்டுவிடலாம். இங்கு சிறப்பாகப் பதிவுகள் செய்ய அச்சமூக ஊடகங்கள் உதவாது எனில் விட்டுவிடுவது எனது இயல்பு. ஒலிப்புக் கோப்புகளை தானியக்கமாக இணைக்க Spell4Wiki உதவும், உங்களின் கணியத் திறனைக் கொண்டு பல நுண்கருவிகளை உருவாக்க இயலும் என நம்புகிறேன். உங்களைப் போன்ற, ஒரு தமிழ் நண்பர் உருவாக்கியது என்பதால் Spell4Wiki கருவி மீது எனக்கு ஈர்ப்பு. நம் நண்பர் உருவாக்கியதை, நாம் தான் முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்பதே எனது வேண்டுகோள். இல்லாதவற்றை உருவாக்கவே கோருகிறேன். நம்மில் இருக்கும் அனைத்து தமிழ் சொற்களுக்கும் ஒலிப்புக்கோப்புகள் இருந்தால் மிக நன்றாக இருக்கும். உங்கள் கணியத் திறனைக் கொண்டு, சிறப்பான தீர்வுகளைத் தாருங்கள். ஏற்கவே ஒரு சொல்லில் ஒலிப்புக்கோப்பு இருந்தால் அதனை நீக்குதல் நன்று. ஒரு தமிழ் சொல்லில் ஒரு படம், ஒரு ஒலிப்புக்கோப்பு, ஒரு இலக்கிய சான்று இப்படி அமைத்தால் மிகச்சிறப்பாக இருக்கும் என்பதே எனது விருப்பம். பிறரிடமும் கலந்துரையாடுங்கள். அதுவே உங்களை மேம்படுத்தும். நன்றி. மீண்டும் மற்றுமொரு இலக்கில் பயணிப்போம். உழவன் (உரை) 01:31, 2 திசம்பர் 2023 (UTC)Reply

ஊரின் பெயர்களில் …

[தொகு]

ஏற்கனவே தமிழ் விக்கியில், விக்கிதரவில் உள்ளவற்றை மீண்டும் இதில் உருவாக்குதல் நன்றன்று. எண்ணிக்கையை உயர்த்தவே உதவும். விக்கித்தரவு கொண்டு படங்களை இணைக்க முயற்ச்சியுங்கள். எனவே, ஊர் பெயர்களில் உலக அகரமுதலிகளில் சொற்கள் எழுதுவதில்லை என்பதை உணருங்கள். தயவுசெய்து இதுபோன்று உருவாக்காதீர்கள். உழவன் (உரை) 00:46, 1 பெப்பிரவரி 2024 (UTC)Reply

வணக்கம், பகுப்பு:ஆங்கிலம்-இந்திய இடங்கள் என்பதை காணுங்கள் இதில் ஊர் பெயர் ஆங்கிலத்தில் உள்ளது. இதை தமிழில் உருவாக்கலாம் என்று எண்ணினேன். நான் உருவாக்கியது எல்லாம் இந்திய மாநிலங்களின் தலைநகரங்கள். இது நான் பின்பு உருவாக்க போகும் பிறமொழி சொற்களுக்கு உதவும் [எ-கா: ಬೆಂಗಳೂರು பெங்களூர்] ஆங்கில விக்சனரி பகுப்பு en:Category:en:Cities in India. இதற்குப்பின்பு அனைத்து நாடுகள் பெயர்களை தமிழில் உருவாக்க திட்டமிட்டு உள்ளேன். சில ஊர்களின் பெயர்கள் காண்போருக்கு தெரியாமல் இருக்கலாம் அதற்கு உதவும். மேலும் காண விக்கிப்பீடியா இணைப்பு உதவும் என்று எண்ணுகிறேன். Sriveenkat (💬) 01:18, 1 பெப்பிரவரி 2024 (UTC)Reply
@Info-farmer Sriveenkat (💬) 14:26, 1 பெப்பிரவரி 2024 (UTC)Reply
2010 அப்பகுப்பு வழிகாட்டல் இல்லாநிலையில் நான் உருவாக்கிய பகுப்பே. அன்று விக்கித்தரவு திட்டம் குறித்து… உங்கள் திறன் புதிய வழிகளை பிறருக்கு தர எண்ணினேன். அதனால் தான்ரி விக்கிமூலம் விக்கிதரவு திட்டத்தை எதிர் நோக்குகிறேன். உழவன் (உரை) 14:53, 1 பெப்பிரவரி 2024 (UTC)Reply
"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Sriveenkat&oldid=1995257" இலிருந்து மீள்விக்கப்பட்டது