பரகாயப் பிரவேசம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பரகாயப் பிரவேசம், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. கூடு விட்டு கூடு பாய்தல்
  2. தன் உயிரை மற்றொரு உயிர் போன உடலில் செலுத்துவது.
  3. வேறொரு உடலில் புகுந்துக்கொள்ளல்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. driving one's own life into a corpse.
  2. entering another's body

விளக்கம்[தொகு]

  • வடமொழிச் சொல்..पर (பர) + काय (காய) + प्रवेशन (ப்ரவேஸன்)...परकायप्रवेशन...ப1-ரகா1-ய ப்1-ரவேஸன்...பரகாயப் பிரவேசம்...பண்டைய காலத்தில் முனிவர்களும், சித்த புருடர்களும் பழக்கத்தில் வைத்திருந்த ஒரு சித்தி (கலை)... இது ஒருவர் அவருடைய விருப்பத்தில் பேரில், அவருடைய உயிரை அப்போது நிலைகொண்டிருக்கும் உடலிலிருந்து நீக்கி, வேறொரு உயிர் போன உடலில் செலுத்திக் கொண்டு வாழ்வதாகும்...அவ்வாறு விருப்பப்படி உயிர் நீத்த உடலைப் பாதுகாத்து, வேண்டும்போது புதியதாக புகுந்த உடலை விட்டு மீண்டும் இயல்பான தன் பழைய உடலில் புகுந்துகொள்ளமுடியும்...இதையே பரகாய பிரவேசம் என்பர்.. பர=பிற + காயம்=உடல் + ப்ரவேசம்=நுழைதல்...தமிழில் கூடு விட்டு கூடு பாய்தல் என்று சொல்வர்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=பரகாயப்_பிரவேசம்&oldid=1228180" இருந்து மீள்விக்கப்பட்டது