உள்ளடக்கத்துக்குச் செல்

பவித்திரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

பவித்திரம்(பெ)

 1. தூய்மை, பரிசுத்தம்
  பவித்திரத்தும்பிபறந்ததே (சீவக. 2311).
 2. வைதிகச் சடங்கில் வலக்கைப் பவித்திர விரலில் அணியும்படி தருப்பையாற் செய்யப்படுவது
 3. தருப்பைப்புல்
 4. பவித்திரமோதிரம் - தருப்பைப்புல் பவித்திர வடிவமான பொன் மோதிரம்
 5. பவித்திரோற்சவம் - சிவாலயங்களிலும் விஷ்ணு கோயில்களிலும் ஓராண்டு நிகழ்ந்த பூசைகளில் நேரும் குறைவுக்குப் பிராயச்சித்தமாகப் பெரும்பாலும் ஆவணி மாதத்தில் நடத்தப்படும் திருவிழா
 6. பவித்திரமாலை - பட்டால் அல்லது நூலால் முடிப்புக்களுடன் செய்யப்பட்ட மாலை வகை.
 7. பூணூல்
  பவித்திராரோபணம்
 8. நெய்
 9. தேன்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 1. sacredness, purity
 2. ring of darbha grass worn on the fourth finger of the right hand on religious occasions
 3. darbha grass
 4. finger ring of gold made in semblance of a darbha ring
 5. festival in honour of Vishnu or Siva in the month of Avaṇi, performed to make good the shortcomings in the worship of the year
 6. necklace of silk or cotton thread knotted in a special way
 7. the sacred thread
 8. ghee
 9. honey
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பவித்திரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

பவித்திரன், பவித்திரவான், பவித்திரி, பவித்திரை, பவுத்திரன், பவுத்திரம், பவுந்திரம், பவித்திரவிரல், பவித்திரமோதிரம், பவித்திரோச்சவம், பவித்திரமுடிச்சு, பவித்திரங்கொடுத்தல்

"https://ta.wiktionary.org/w/index.php?title=பவித்திரம்&oldid=1173110" இலிருந்து மீள்விக்கப்பட்டது