பிக்கல் பிடுங்கல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பிக்கல் பிடுங்கல்

சொல் பொருள்

பிக்கல் – பங்காகச் சொத்தைப் பிரித்துக் கொண்டு போதல். பிடுங்கல் – இடை இடையே பங்காளியரும் பிறரும் வலிந்து பறித்துக் கொண்டு போதல்.

விளக்கம்

பிக்கல் - பிய்த்தல், பிரித்தல், பொருளுக்கு உரிமையுடையார் செயல். பிடுங்கல், பொருள் மேல் பற்றால் உரிமை இல்லாரும் இளக்கம் கண்டு வலிந்து பிடுங்கிக் கொண்டு போதல். “பிக்கல் பிடுங்கல் எதுவும் இல்லை” என்று பாராட்டுவது உண்டு. பிடுங்குதல் வழிப்பறி போல்வதாம்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிக்கல்_பிடுங்கல்&oldid=1913850" இலிருந்து மீள்விக்கப்பட்டது