பிதிர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
பொருள்

பிதிர்(பெ)

 1. தந்தை
  • பிதிர்வாக்கிய பரிபாலனம்
 2. தந்தை வழியினுள்ளார்
 3. இறந்த பெற்றோர் முதலோரின் ஆன்மா; பிதிரர்
 4. பிதிர்தேவதை; யமலோகத்தில் வாழும் ஒருசார் தேவ சாதியார்.

(பெ)

 1. மகரந்தம் (பிங்.)
 2. பொடி (பிங்.)
 3. திவலை (பிங்.)
 4. துண்டம்
  • மதிப்பிதிர்க் கண்ணியீர் (தேவா. 599, 4)
 5. பொறி
  • கொல்ல னெறிபொற் பிதிரின்(நற். 13)
 6. கணம், காலநுட்பம்(பிங்.)
 7. கைந்நொடி
 8. விடுகதை
  • கதைகளும்பிதிர்களு மொழிவார் (கம்பரா. ஊர்தேடு. 139)
 9. அதிசயச்செயல்
  • பின்னால்தான்செய்யும்பிதிர் (திவ். இயற். நான்மு. 83)
 10. சேறு
  • மருப்பிற் பிதிர்பட வுழக்கி (கல்லா. 62, 10)

(வி)

 1. உதிர்
  • பிதிர்ந்துபோயின பிறங்கல்க ளேழும்(கந்த பு. யுத்தகாண். முதனாட். 50)
 2. சிதறு
  • பிதிர்ந்தெழுந்தார்த்த பொடிக்குழீஇ (கம்பரா. பிரமாத். 100)
 3. உதிர்
 4. கிழி
  • சீலை பிதிர்ந்துபோயிற்று.
 5. பர
 6. மனங்கலங்கு
  • பிதிரு மனமிலேன் (திவ். இயற். நான்மு. 84)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

 1. father, used only in compounds
 2. paternal ancestors; forefathers
 3. manes
 4. a class of Devas or gods in the world of Yama

(பெ)

 1. pollen of a flower
 2. powder
 3. drop of water
 4. piece
 5. spark
 6. moment of time
 7. snap of the finger
 8. conundrum, puzzle
 9. acts of wonder
 10. mud

(வி)

 1. be separated into small particles; to fall to powder
 2. become scattered
 3. scatter, spread
 4. be torn
 5. spread
 6. be bewildered

சொல்வளப் பகுதி[தொகு]


( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிதிர்&oldid=1242924" இருந்து மீள்விக்கப்பட்டது