பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- பிள்ளைப்பெருமாள் ஐயங்கார், பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- அழகிய மணவாள தாசர் என்று அழைக்கப்பட்ட இந்தத் திருமால் அடியார் கி.பி. 1623 முதல் 1659 வரை மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரின் அரசவையில் பணிசெய்துக்கொண்டிருந்து திருவரங்கம் அரங்கன்மேல் தீவிர பக்தியும் ஈடுபாடும் கொண்டிருந்தார்...இவருடைய பெருமையை அறிந்த நாயக்க மன்னன் இறைவன் அரங்கனுக்குச் சேவை செய்ய இவரை திருவரங்கத்திற்கே அனுப்பிவைத்தார்...வைணவர்களின் புனிதமான, வேதங்களுக்கு ஒப்பான நாலாயிர திவ்விய பிரபந்தம் என்னும் நூலுக்குப் பின் அதே புனிதத்தன்மையோடும், கவித்துவத் திறமையோடும் அஷ்ட பிரபந்தம் என்னும் எட்டு நூட்களைக்கொண்ட ஒரு தொகை நூலை ஆக்கியருளினார்...தமது ஈடு, இணையற்ற புலமையால் 'திவ்விய கவி' அதாவது 'தெய்வக் கவிஞர்' என்ற பட்டம் பெற்றார்...‘அஷ்டபிரபந்தம் கற்றவன் அரைப் பண்டிதன்’ என்னும் பழமொழி இந்த நூலின் சிறப்பைத் தெரிவிக்கிறது.. இவருடைய நூல்களை ஆழ்ந்து கற்றால் தமிழ் இலக்கிய-இலக்கணங்களில் பாதியளவு தேர்ச்சி பெற்றவராகிவிடலாம் என்பதே உட்கருத்து...
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- a Tamil divine poet of 17th century AD who authored 'Ashta Prapandham' a Bhakthi literature.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +