பிள்ளையாண்டான்
Appearance



தமிழ்
[தொகு]
ஒலிப்பு
![]() | noicon |
(கோப்பு) |
பிள்ளையாண்டான், .
பொருள்
[தொகு]- மகன், தனயன்
- வாலிபன்
- ஆண்பிள்ளை
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- son
- young man
- youth
விளக்கம்
[தொகு]- பிள்ளை + ஆண்டான் = பிள்ளையாண்டான்...பொதுவாக ஆண்பிள்ளை/வாலிபன் என்பது பொருள்...சிறப்புப் பொருளாக அந்தணர்களின் வழக்குச் சொல்லில் பயனாகும் விதம் = பெண்களுக்குச் சுதந்திரமில்லாத அன்றைய நாட்களில் ஒரு பெண்ணானவள் திருமணம் ஆகும்வரை தந்தையின் ஆளுகைக்குட்பட்டும், மணம் முடிந்தபின் கணவனின் ஆளுகைக்குட்பட்டும், கடைசி நாட்களில், கணவன் இல்லாத பட்சத்தில், பிள்ளை அதாவது மகனின் கட்டுப்பாட்டிலும் வாழவேண்டும் என்பது முறையாக இருந்தது... ஆண்டான் என்றால் ஆள்பவன் என்று பொருள்...எ.கா. ஆண்டான்--அடிமை...ஆகவே கடைசி காலத்தில் பிள்ளை என்னும் ஆண்டானின் கட்டுப்பாட்டில் இருப்பதால் ஒரு பெண்ணிற்கு அவளுடைய பிள்ளை அப்போது பிள்ளையாண்டான் ஆகிறான்...ஆனால் எல்லா வேளைகளிலுமே சாதாரணமாகப் பேசும்போதெல்லாம் மகனை என் பிள்ளையாண்டான் என்றே குறிப்பிட்டனர்...