பூசணிக்காய்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பூசணிக்காய்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் - pumpkin
விளக்கம்
- பூசணிக்காய் என்பதும் பரங்கிக்காய் என்பதும் வேறானவை. பச்சை நிறத்தின் மேல் வெண்படலம் பூசினாற்போல் புறத்தோற்றம், உள்ளே வெள்ளை நிறத்தில் சதைப் பகுதி இருப்பது பூசணிக்காய். பரங்கிக்காய் இளையதாக இருக்கும்போது பச்சையாக இருக்கும். நன்றாக முற்றிய பின் (பழுத்து) பழுப்பு நிறத்தில் இருக்கும். அறுத்தால் உள்ளே மஞ்சள் நிறத்தில் சதைப்பகுதி இருக்கும். பூசணிக்காயை வெள்ளைப் பரங்கி என்று சொல்லும் வழக்கமுண்டு. யாரும் பரங்கிக்காயைப் பூசணிக்காய் என்று சொல்லார்.வெள்ளைப் பூசணிக்காயை சமையலுக்கும் மற்றும் திருஷ்டி கழிக்கவும், பூசை, கலியாணம் போன்ற சுப காரியங்களுக்கும் பயன்படுத்துவார்கள். பரங்கிக்காய் நம் நாட்டில் சமையலைத் தவிர வேறு எந்த காரியங்களுக்கும் பயன்படாது.