பூமிசருக்கரைக் கிழங்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பூமிசருக்கரைக் கிழங்கு, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. ஒரு வகை இனிப்பான பெருங்கிழங்கு

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்

merma arenaria...(தாவரவியல் பெயர்))

  1. a kind of giant, sweet, root vegetable

விளக்கம்[தொகு]

  • பூமி + சருக்கரை + கிழங்கு = பூமிசருக்கரைக்கிழங்கு...ஓர் அரிதான கிழங்கு வகை...வியாபார முறையில் பயிரிடப்படுவதில்லை...யானையின் கால்களின் பருமனும் வட்டமான உருவமும் கொண்டது...இதை விற்பவர் ஒரு கிழங்குத் துண்டை தன் தலையில்தான் தூக்கிவருவார்...மிகுந்த மருத்துவ குணங்கள் கொண்டது...இதன் மேற்தோல் மிக மெல்லியதாக இளஞ்சிவப்பு நிறத்திலும் உட்புறம் வெண்மை நிறத்திலுமிருக்கும். சமையலில் பயன்படுத்தப்படுவதில்லை...பச்சையாகச் சீவி உண்பர்...இனிப்புச் சுவையுடன் எளிதில் கடித்து மெல்லக்கூடியவாறு இருக்கும்...

மருத்துவ குணங்கள்[தொகு]

  • இந்தக் கிழங்கினால் பிரமேகம், அதிசுஷ்கம், வெள்ளை வீழல், சுரம், மூலம் ஆகியவை போகும்...உடல் பூரிக்கும்...

பயன்படுத்தும் முறை[தொகு]

  • இக்கிழங்கை தாதுவிருத்தி இலேகியங்களில் சேர்ப்பர்...இதன் தனிச் சூரணத்தை வேளைக்குத் திரிகடி அளவு தேனில் குழைத்துக் கொடுத்தால் மூர்ச்சை, நாட்பட்ட இருமல், உதிரச்சிக்கல், கீல்வாதம், காமாலை, வயிற்று வலி, சீதளத்தால் உண்டான நரம்புகளின் சோர்வு ஆகியப்பிணிகள் நீங்கும்...இதனை வெந்நீர் விட்டு அரைத்துப் பற்றுப்போடக் கைகால் குடைச்சல் போகும்... தண்ணீர் விட்டரைத்து நல்லெண்ணெயில் கலக்கிக் காய்ச்சி வடித்துப் பக்கவாதம், சூலை ஆகியவற்றிற்குப் பூசிப்பிடிக்கக் குணமாகும்...இதனைக் காதில் விடக் காதுவலி நீங்கும்...கிழங்கை காடியில் உரைத்து உதிருகின்ற உரோமங்களுக்குத் தடவிவர உதிராமல் வேரூன்றச்செய்யும்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=பூமிசருக்கரைக்_கிழங்கு&oldid=1226323" இலிருந்து மீள்விக்கப்பட்டது