பூவன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
திருமாலின் தொப்புளில் உண்டான தாமரைப்பூவின்மீது அமர்ந்திருக்கும் பூவன்
பூவன்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பூவன், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. இறைவன் பிரம்மதேவன்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. lord brahma, a hindu deity, responsible for creation of the universe, as seated on the flower lotus.

விளக்கம்[தொகு]

இந்து சமயத்தின் முதற் மூன்று கடவுளர்களில் ஒருவரும், ஆக்கும் தொழிலைச் செய்யும் (சிருஷ்டிக்கும்) இறைவனுமான பிரம்மா என்னும் பிரம்மதேவனை பூவன் என்று அழைப்பர்...இந்தக் கடவுள் திருமாலின் தொப்புளிலிருந்து எழுந்த தாமரைப்பூவில் தானே தோன்றியவர் என்பது இவர் பிறப்பைப் பற்றிய கருத்துக்களில் ஒன்றாகும்...அவ்வாறு பூவிலிருந்து தோன்றி, பூவில் அமர்ந்தவாரே காட்சியளிப்பதால் பூவன் என்று அழைக்கப்படுகிறார்...நான்கு வேதங்களைப் படைத்தவரும் பிரம்மதேவனே...இவருடைய பத்தினியே கல்விக் கடவுளான கலைமகள் (சரசுவதி) ஆகும்...பிரம்மனின் மைந்தனான மனு என்பவரிடமிருந்து தோன்றியவர்களே மனிதர்கள்...பூவனின் பெயரில் ஒரு வாழைப்பழ வகையும் பூவன்கதலி அல்லது பூவன் பழம் என்று வழங்கப்படுகிறது...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---பூவன்--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பூவன்&oldid=1249159" இருந்து மீள்விக்கப்பட்டது