பேச்சு:ب

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்ச்சொல் பாகம் என்பதைப் பாகம் (paagam) என்று பலுக்குதல் வேண்டும்; baagam என்பது பிழையான பலுக்கல். பகு--> பகுத்தல், பாகம். பகு என்பது பா (paa) என்று மாறும். பாதி என்பது பகு என்பதில் இருந்து பிறந்தது. பகு,பகை, பகல், பகட்டு (தன்னை வேறாகப் பகுத்துக் காட்டுதல்), பால், பாத்தி முதலான எத்தனையோ சொற்கள் தமிழில் பகு என்பதில் இருந்து பிறந்துள்ளன. எனவே பாகம் (paagam) என்று பலுக்குங்கள். பின்னர் நேரம் கிடைக்கும்பொழுது பக்கத்தைத் திருத்துகிறேன். ஆங்கிலச் சொற்றொடர்களும் வேண்டாம். தமிழில் அன்பு, கம்ம், கோம், சாம் முதலானவற்றில் வரும் ப ஆங்கில b என்னும் எழுத்தின் ஒலியே. தமிழில் மெல்லொலி பகரம் உண்டு ஆனால், மொழி முதலில் வரலாகாது. தமிழில் வல்லினம் இரண்டே இரண்டு இடத்தில்தான் வலித்து ஒலிக்கும், மற்ற இடங்களில் மெலிந்தே ஒலிக்கும். மொழி முதல் அல்லது முன்னே புள்ளிவைத்த வல்லினம் வந்திருந்தால் - ஆகிய இரண்டே இடங்களில் மட்டுமே வலித்து ஒலிக்கும்--செல்வா 18:36, 20 ஆகஸ்ட் 2010 (UTC)

ஒலிப்புகள்[தொகு]

بِكَ (பிக) (bíka) بِكِ (பிகி) (bíki) بِكُمَا (பிகுமா) (bikumā) என்பதில் உள்ள ஆங்கில எழுத்துகள் சரியான ஒலிப்பு எனில் அவற்றைத் தமிழில் முறையே بِكَ (பி31) (bíka) بِكِ (பி3கி1) (bíki) بِكُمَا (பி3கு1மா) (bikumā) என்று எழுதுவது நல்லது. ஏனெனில் பிக, பிகி, பிகுமா என்று எழுதினால் piga, pigi, pigumaa என்றோ, piha, pihi, pihumaa என்றோ தமிழ் மக்கள் ஒலிக்கக் கூடும். தமிழில் ஒலிப்பானது இடம்சார்ந்து சூழல்சார்ந்து சீராக ஒலிப்பது. தமிழில் bapu (baapu) என்பதை பாபு என்று எழுதினால் paabu என்றுதான் ஒலிப்பர் (சிலர் பிழையாக baabu எனலாம், ஆனாலும் baapu என்று ஒலிக்க மாட்டார்கள். எனவே. பா3பு1 என்று எழுதினால் குழப்பம் வராது (துல்லியம் பார்க்கும் இது போன்ற சூழல்களில்). --செல்வா 19:10, 20 ஆகஸ்ட் 2010 (UTC)

Dual என்பது இரண்டிரண்டாகக் காணப்படும் சொற்களுக்கான உருபா அல்லது இரண்டுக்கும் பொதுவான என்னும் பொருள் உருபா? சமசுக்கிருதத்தில் Dual என்பது கண்கள், கைகள் போன்ற இரண்டாக மட்டும் இருப்பதற்கான பன்மை வடிவம் என்று தனியாக உண்டு. இதே போல கிரேக்க மொழியிலும் உண்டு. தமிழில் கிடையாது. தமிழில் ஒன்றுக்கு மேலானது எல்லாம் பன்மை. அவை யாவுக்கும் ஒரே பன்மை வடிவம்தான். பாலுருபுகளிலும் அப்படியே. அரபியில் எப்படி? ஒருமை, இருமை, பன்மை என்பது சரியாக இருக்குமா?--செல்வா 19:17, 20 ஆகஸ்ட் 2010 (UTC)

ஒருமை, இருமை, பன்மை என்பது மிகச்சரியே. பையன் (வலதுன்), (இரு) பையன்கள்(வலதானி), இங்கு இரு என்பது மறைமுகமாக சுட்டுகிறது. -- Mahir78 19:15, 22 ஆகஸ்ட் 2010 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:ب&oldid=779996" இலிருந்து மீள்விக்கப்பட்டது