பேச்சு:அந்திசந்தி கூடும் வேளை
தலைப்பைச் சேர்Appearance
அந்திசந்தி என்பதன் பொருள் காலைமாலை என்று தமிழ் இணைய பல்கலைக்கழக தமிழ்-தமிழ் அகர முதலி சொல்கிறது [1] --குறும்பன் (பேச்சு) 21:54, 2 பெப்ரவரி 2013 (UTC)
- நீங்கள் கொடுத்த மேற்கண்டத் தகவல் சரியே...நான் சிறுவனாக இருந்தபோது கிராமத்தில் நண்பர்களுடன் விளையாடிக் களைத்து சற்றே தரையில் படுத்தால் என் பாட்டி என் காதைத் திருகி உட்காரவைத்து 'அந்திசந்தி கூடற வேளெ, படுத்துக்காதே என்பர்'...இந்தச்சொற்றொடரில் முதலிரண்டு சொற்களும் வடமொழி...வடமொழிச் சொற்கள் 'தத்பவமாக, பிற மொழிகளில் பயன்படும்போது சிலசமயம் வழக்கைப்பொறுத்து பொருள் மாறுவது இயல்பே..உதாரணமாக 'பிரமாதம்' என்னும் வடசொல் தெலுங்கில் 'விபத்து' என்று பொருள்படும்...தமிழிலோ மிகச்சிறந்த என்னும் பொருளில் பயனாகிறது...அவ்வாறே தமிழ் 'மாணவன்' தெலுங்கில் 'மாநவடு, அதாவது மனிதன் என்று பொருள் தரும்...
- சரி, விடயத்திற்கு வருவோம்...சாயங்காலம், சாயந்திரம், சாயரட்சை ஆகிய தமிழில் பயன்படும் வடமொழிச் சொற்கள் மாலைக் காலத்தின் கடைசி நேரத்தைக் குறிக்கும்...இதுவே சந்தியாகாலம் எனப்பட்டு சந்தி என்று குறுகியது...அந்தி என்னும் தனிச்சொல்லுக்கு சென்னை பல்கலைக்கழக பேரகரமுதலியில் ஆங்கிலத்தில் தரப்பட்டிருக்கும் தெளிவான பொருள் Twilight, as joining day with night. அதாவது இரவோடு சேரும் நேரம்...எனவே அந்தி என்னும் சொல் முன்னிருட்டு நேரத்தைக் (இரவு) குறிக்கும்...Twilight என்னும் ஆங்கில சொல்லின் முழுப்பொருள் 'the light from the sky between full night and sunrise or between sunset and full night என்பதாகும்...ஆகவே இந்தப்பக்கத்தில் இரவும் மாலையும் இணையும் தருணம் என்னும் பொருள் விளக்கம் சரியே என்பது என் கருத்து...'காலைமாலை' என்பது மேலெழுந்தவாரியான கொச்சைப் பொருள்...அவ்வாறுதான் ' Colloq' என்று அகரமுதலியில் தரப்பட்டுள்ளது...நான் இந்தப்பக்கத்தை பதிவேற்றியபோது அகரமுதலிகளைப் பார்க்கவில்லை...வெறும் என் அனுபவத்தைக்கொண்டே அதைச் செய்தேன்...மேலும் விளக்கமுடியும்...இதுவே போதும் என்று நினைக்கிறேன்...நன்றி...வணக்கம்...--Jambolik (பேச்சு) 16:22, 3 பெப்ரவரி 2013 (UTC)
Start a discussion about அந்திசந்தி கூடும் வேளை
Talk pages are where people discuss how to make content on விக்சனரி the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve அந்திசந்தி கூடும் வேளை.