பேச்சு:தாடி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
  • திரு.பழ.கந்தசாமியவர்களே! தமிழகத்தினைச் சார்ந்த படத்தினை இயன்றவரை சேர்க்கவே விருப்பம். அதனால் முன்பிருந்த படத்தை மாற்றிவிட்டேன். உங்களுக்கும் இக்கருத்து ஏற்புடையதுதானே?த*உழவன்
  • நானும் தேடிப்பார்த்தேன், தென்படவில்லை. நீங்கள் செய்தது மகிழ்ச்சியே! பழ.கந்தசாமி 06:06, 25 ஏப்ரல் 2010 (UTC)
  • படங்களை விரைவில் தேட நான் எனது ஃபயர்பாக்சில் தேடிச்சாளத்தினை ஆங்கில விக்கிப்பீடியாவிற்கு மாற்றிக் கொளவேன். அங்ஙனம் தேடும்போது, அது பெரும்பாலும் விக்கி ஊடக நடுவப் படங்களை எளிதில் காட்டும். இருப்பினும், பெரியண்ணன் நன்கு படங்களை இடுகிறார். ஆனால் அவருக்கு நேரமில்லை போலிருக்கிறது. அடிக்கடி வருவதில்லை.த*உழவன் 06:31, 25 ஏப்ரல் 2010 (UTC)

படங்கள் பற்றிய கருத்து[தொகு]

  • கருத்தை தெளிவாக உணர்த்தும் ஒரு படம் வலப்புறம் இருத்தல் நல்லது. அதில் பிற பொருளுக்கான சுட்டுகள் இல்லாமல் இருந்தால் நல்லது. இங்கே தடி தாடி என்னும் இருசொற்கள் தருவது குழப்பம் தரும். தாடிகளில் பல வகை இருப்பதை இரண்டாவது படம் சுட்டலாம். அளவுக்கு அதிகமாக படங்கள் சேர்ப்பதும், பல தலைவர்களின் பெயரைச் சுட்டுவதும் தேவையானதாக எனக்குப் படவில்லை. பயன்பாடுநோக்கி தக்க அளவோடு படங்கள் சேர்த்தால் நன்றாக இருக்கும். --செல்வா 04:06, 24 ஜூலை 2010 (UTC)
  • சில மாற்றங்கள் செய்துள்ளேன்.பல படங்கள் காப்புரிமை போன்றவைகளால் பல்வேறு காலங்களில் நீக்கப்படுகின்றன. அதனால் காட்சியக முறையில் ஒன்று போனால், மற்றது நின்று பொருளுணர்த்தும். அனைத்துச்சொற்களிலும் படங்கள் எண்ணிக்கை அதிகமாக இராது. தாடி என்றாலே பல்வேறு சமூக நிலை, கல்வியறிவு உடையவர்களுக்கு நினைவுக்கு வருபவர்கள் படங்கள் இணைக்கப்படுகின்றன.--த*உழவன் 05:22, 24 ஜூலை 2010 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:தாடி&oldid=763606" இலிருந்து மீள்விக்கப்பட்டது