பேச்சு:பூசணிக்காய்
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Pazha.kandasamy
பூசணிக்காய் என்னும் பக்கத்தில் கீழ்கண்ட குறிப்பு தவறானது: "பூசணிக்காயை வெள்ளைப் பரங்கி என்று சொல்லும் வழக்கமுண்டு. பாரதி, "வெள்ளைப் பரங்கியைத் துரை என்ற காலமும் போச்சே" என்று பாடியுள்ளார்.". பூசணிக்காயை வெள்ளைப் பரங்கி என்று யாரும் சொல்லமாட்டார்கள். ஐரோப்பாவிலிருந்து வந்த அனைவரையும் நம் நாட்டினர் பரங்கியர்கள் என்றே அழைத்தனர். பாரதி பயன்படுத்திய "வெள்ளைப் பரங்கி" என்ற சொற்களுக்கு வெள்ளை நிறத்தவரான பரங்கியர்கள் என்றே பொருளாகும்.பூசணிக்காய்க்கு சம்பந்தமில்லை.--Jambolik 01:13, 18 திசம்பர் 2011 (UTC)
- அக்குறிப்பு தினமணிக்கதிரில் குறிப்பிட்ட நாளில் வந்த "பிழையின்றித் தமிழ் பேசுவோம்" தொடரிலிருந்து எடுக்கப்பட்டது. கவிக்கோ ஞானசெல்வன் என்பவரால் எழுதப்படுகிறது. பரங்கி வெள்ளை என்பதையே அவர் குறிப்பிடுகிறார் என நினைக்கிறேன். பழ.கந்தசாமி 01:21, 18 திசம்பர் 2011 (UTC)
நீங்கள் நினைப்பது வெள்ளைநிறத்தவரான பரங்கியர்கள் என்பதையா அல்லது வெள்ளைப் பரங்கி என்று சொல்லப்படுவதாகக் கூறப்படும் பூசணிக் காயையா?--Jambolik 02:02, 18 திசம்பர் 2011 (UTC)
- பூசணிக்காயைப் பற்றித்தான். பழ.கந்தசாமி 02:58, 18 திசம்பர் 2011 (UTC)