பேச்சு:வயசு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தலைச்சொல் வயது என்றும், வயசு என்னும் சொல்லை வழிமாற்றாகவோ, அல்லது பேச்சு வழக்கு என்று குறித்துவிட்டு, வயது என்னும் சொல்லைப் பார்க்கவோ செய்வது நலம். இதே போல புதுசு என்பதற்கும் தனிப் பக்கம் இருக்கலாம், ஆனால் அது புதியது என்பதன் மாற்று வடிவம், பேச்சுவழக்கு வடிவம் என்று குறிப்பது நல்லது. --செல்வா 13:07, 3 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

  • வயது என்பதன் பேச்சு வழக்கு என்று குறிப்பிடலாம். ஆனால், வயது, வயசு இரண்டுக்கும் தனிப்பக்கங்களாக இருத்தலே நலம். இச்சொல் சென்னைப்பேரகரமுதலியில் தனியாக உள்ளது; பேச்சுவழக்கு என்றும் குறிப்பிட்டுள்ளனர். பழ.கந்தசாமி 15:14, 3 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]
ஆமாம், தனிப்பக்கம் இருக்கலாம். ஆனால் வயது, வயசு ஆகிய இருபக்கங்களுகும் இணைப்புகள் இருக்க வேண்டும். சில பாடல்களில் பேச்சு வழக்குச் சொல்லே கூட ஆண்டிருப்பர். அது போன்ற எடுத்துக்காட்டுகளையும் தனியே வயசு என்னும் பக்கத்தில் இடலாம்.--செல்வா 23:00, 3 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:வயசு&oldid=787550" இலிருந்து மீள்விக்கப்பட்டது