பேச்சு:வில்லி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

Untitled[தொகு]

செல்வா, இயேசு பதிகைக்கு மெருகூட்டியுள்ளீர்கள். நன்றி! மற்றும் வார்ப்புரு பற்றி விளக்கினீர்கள். வெள்ளோட்டமாக புதிய சொற்களைச் சேர்க்கவும் சொடுக்கினேன்; வில்லி இடுகைசெய்தேன். கீழ்வரும் வார்ப்புருக்கள் வந்தன:

வில்லி (பெ)

பொருள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வில்லி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

இங்கே உசாத்துணை, மூல ஆவணம் போன்றவை சேர்த்தால் எப்படி என்று கேட்டேன். ஒருவேளை அனைத்தையுமே

விளக்கம்

என்பதன்கீழ்க் கொணரலாமோ?--George46 17:26, 1 ஜூன் 2010 (UTC)

 • ஆங்கிலம் என்பதற்கு பதில் {{ஆங்கி}}
விளக்கம் என்பது சொல்லுக்கான விளக்கம், அது தொடர்பான கருத்துகள். உசாத்துணை, சான்றுகோள், மூல ஆவணம் என்பன வலுவூட்டும் சான்றுகள், துணைநூல்கள், துணை ஆவணங்கள். இவை வேறாக இருப்பது நல்லதுஎன்பது என் கருத்து.--செல்வா 17:48, 1 ஜூன் 2010 (UTC)
 • உங்கள் கருத்துக்கு உடன்படுகிறேன். மேலும், ஆங்கிலம் தனியாகவும் அதன்கீழே

மொழிபெயர்ப்புகள்

(பிற மொழிபெயர்ப்புகள்)தனியாகவும் அமையலாமோ?--George46 18:08, 1 ஜூன் 2010 (UTC)

எல்லா மொழிபெயர்ப்புகளும் ஒரு தலைப்பின் கீழ் வருதல் நன்றாக இருக்கும். ஆங்கிலம் அவற்றுள் முதலாவதாக வேண்டுமென்றால் வரலாம். பிற விக்கிகளில் இலத்தீன் அகரவரிசைப்படி மொழிபெயர்ப்புகளை அடுக்குகிறார்கள். நாம் தமிழ் அகரவரிசைப்படி அடுக்கினாலும் முன்னணியில் ஆங்கிலம் இருக்கும். ஆங்கிலம், சீனம், எசுப்பானியம், பிரான்சியம், இந்தி ஆகியவை முக்கிய மொழிகளாக நாம் இன்று நினைக்கலாம் (மக்கள் எண்ணிக்கை, அரசியல் மற்றும் பிற காரணங்களுக்காகவும்).எனினும் நிப்பானியம் (சப்பானியம்), இடாய்ச்சு, போர்த்துக்கீசியம் என வேறு ப்ல மொழிகளும் முக்கியமானவையே. மக்கள் தொகை அளவில் முதல் 20-30 மொழிகள் முக்கியமானவையாக இருக்கலாம். --செல்வா 18:39, 1 ஜூன் 2010 (UTC)
 • நல்ல கருத்து. தாங்கள் குறிப்பிட்ட மொழிகளுக்குச் சுருக்கக் குறியீடுகள் உருவாக்கி (ஆங்கிலம் போல) வார்ப்புருக்கள் ஆக்கினால் நன்றாயிருக்கும்.--George46 18:54, 1 ஜூன் 2010 (UTC)
 • ஏற்கனவே பலவற்றுக்கும் உள்ளன. இல்லாதனவற்றுக்கு ஏற்கனவே உள்ள ஒன்றைப் படியெடுத்து எளிதாக ஆக்கிக்கொள்ளலாம். இப்பொழுதுள்ள சிலவற்றைக் கீழே தருகின்றேன். இவை {{மொழி}} என்னும் வடிவத்தில் உள்ளன. இதில் மொழி என்பது ஆங், எசு, பிரா, இடா, போர், இந்தி, சீனம் முதலானவற்றில் ஏதேனும் ஒன்றாக இருக்கலாம். எ.கா:

{{ஆங்}}, {{இடா}}, {{எசு}}, {{கிசு}}, {{இந்தி}}, {{சீனம்}}, {{போர்}}, {{பிரா}}

 • done ஆங்கிலம்
 • geld இடாய்ச்சு
 • Jesus எசுப்பானியம்
 • kumi (கிசுவாகிலி)
 • xx இந்தி
 • x+ (சீனம்)
 • eu (போர்த்துகீசியம்)
 • gomb பிரான்சியம்

--செல்வா 19:10, 1 ஜூன் 2010 (UTC)

 • மிகவும் பயனுள்ள தகவல். நன்றி!--George46 19:16, 1 ஜூன் 2010 (UTC)

{{ஆங்}} என்பதற்கு மாற்றாக {{ஆங்கி}} பயன்படுத்தினால் இப்படி ஆங்கிலம்முழுமையாக வரும். இதற்கு முன் பயன்படுத்திய {{ஆங்}} என்பதனை நீக்கினால் ஏற்படும் மாற்றங்களை சரி பார்த்து விட்டு, அதனையும் முழுமையாக வருவது போல மாற்ற நினைத்துள்ளேன்.

(பிரெஞ்சு) என்பது தவறா?

{த*உழவன் 00:43, 2 ஜூன் 2010 (UTC)}

 • த*உழவனே, சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன். நீங்களே முந்திக்கொண்டீர்கள். Ang என்று தட்டச்சு செய்ததும் ஆங்க் என்று வருகிறது. பிறகு, பின்விசை பயன்படுத்தி க் எழுத்தை அழிக்கவேண்டியுள்ளது. நீங்கள் சொல்வதுபோல ஆங்கி (Angi - Anki) ஆக்கிவிட்டால் மிக்க நன்று!!

Orange pog.svgஆங்கிலம் என்று முழுமையாகத் தெரியத்தான் {{ஆங்கி}}வார்புருவை அமைத்தேன். அதற்கு இப்படியும் பலன் இருக்கிறதா? இனி வார்ப்புருக்களை அமைக்கும் போது, விசைப்பலகைப் பயன்பாட்டினையும் கருத்தில் கொள்கிறேன். நான் தமிழ்99விசைப்பலகையைப் பயன்படுத்துகிறேன். அதனால் பின்விசையை அழுத்தவேண்டிய நிலையில்லை. அது மிக எளிது. எனக்கு பிற தட்டச்சு முறைகள் மறந்தே போய்விட்டது. இரவியின் தமிழ்99பற்றிய சிறுஆய்வைக் கண்டேன். அதை நிகழ்பட விளக்கமாகவும் கூறியிருந்தார். மேலும், பல தமிழ்விசைப்பலகைகளையும்,10இந்திய மொழிகளுக்கான விசைப்பலகைகளையும்) இங்கு காணலாம்.--த*உழவன் 05:04, 30 ஜூலை 2010 (UTC)

 • பிரெ என்பது பிரெஞ்சு என்பதற்குச் சுருக்கக் குறியீடு. ஆங்கில வழக்கப்படி (French) அப்படித்தான் சொல்லி வந்திருக்கிறோம். ஆனால் எனக்கு பிரான்சியம் பிடித்திருக்கிறது. பிற மொழிகளைக் குறிக்க அம் விகுதி இருப்பதால் இவ்வாறு கூறுகிறேன். எ.டு.: ஆங்கிலம், எசுப்பானியம், இத்தாலியம், கிரேக்கம், எபிரேயம், அரமேயம், சீனம், உருசியம் முதலியன (சில விதிவிலக்குகளும் உள்ளன: இலத்தீன், இடாய்ச்சு போன்றவை. நன்றி!--George46 01:44, 2 ஜூன் 2010 (UTC)

Orange pog.svgபிரெஞ்சு என்பதனைக் கண்டேன். நான் அதற்கு முன், பிரன்சு' என்று எழுதுவேன். இனி பிரான்சியம் என்பதே தெளிவாகிறது.--த*உழவன் 05:04, 30 ஜூலை 2010 (UTC)


 • ஒரு தமிழ்ச்சொல்லுக்குப் பல பொருள்கள் இருக்கும்போது, அதற்குப் பல்வேறு மொழிகளில் பொருள் தருகையில், முதலில் மொழித்தலைப்பு, அத்தலைப்பின் கீழ் வரிசையாக மொழிபெயர்ப்பு என்று வருதல் (இப்போதுபோல) நலம். பழ.கந்தசாமி 01:50, 2 ஜூன் 2010 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:வில்லி&oldid=1263681" இருந்து மீள்விக்கப்பட்டது