பேச்சு:automobile

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தானுந்து வண்டி அல்லது தானுந்து ஊர்தி' என்பது மேலும்பொருத்தமாக இருக்கும் அல்லவா?

தானுந்து மட்டுமே கூட போதுமானதாக இருக்குமே?--ரவி 08:02, 2 மே 2007 (UTC)[பதிலளி]
த.வி.யில் தானுந்து என்ற கட்டுரை கூட உள்ளதே.--சிவகுமார் 19:37, 2 மே 2007 (UTC)[பதிலளி]
இப்பொழுது தானுந்து என்று மாற்றியுள்ளேன். பல அகராதிகளில் இச்சொல் எடுத்தாலப்பட்டுளது. பேராசிரியர் பசுபதி தானுந்து என்னும் சொல்லை ஒரு வென்பாவிலும் பயன்படுத்தியுள்ளார். --செல்வா 16:19, 23 மார்ச் 2008 (UTC)
தானுந்து என்று சுட்டும் புறவுலகில் உள்ள எடுத்துக்காட்டுகள்
* நவீன தமிழ் அருஞ்சொற்பொருள் அகராதி
* இன்னொரு பட்டியல்
* இதுவும் முதல் எடுத்துக்காட்டும் ஒரே குழுவால் ஆக்கியிருக்கலாம்
* முத்தமிழ் மன்றம்

--செல்வா 19:28, 23 மார்ச் 2008 (UTC)

பயன்பாட்டுக்கு எடுத்துக்காட்டு:


டொராண்ட்டோ பல்கலைக் கழகத்தில் மின்னியல் துறையில் பணியாற்றும் பேராசிரியர் பசுபதி அவர்கள் வலைக்குழுமம் ஒன்றில் எழுதியது:

From: Pas (@ pas.dialup.cs.toronto.edu) on: Thu Nov 11 09:58:56 Folks, When I visited 'veNbaa vIdu" last week-end, they were thinking of celebrating DeepAvaLi by going to a Tamil movie. Here is what I heard.

அழகி,
ஆங்கிலத்தில் அன்றாடம் அக்கப்போர் கேட்டலுத்துத்
தாங்காத தாகம் தமிழைக் குடிக்க;
அரங்கை அணிசெய்து அன்னைமொழி ஆர்க்கும்
திரைப்படம் காணலாம் சேர்ந்து

அன்பன்

தானுந்து நிற்பதற்கும் தண்டப் பணச்செலவு;
போனவுடன் போனகம் பூந்தி பகர்களவு;
தண்டமிழ் மீனைத் தமிங்கிலம் சாப்பிடும்
எண்மையைக் காணல் எதற்கு.

தானுந்து =automobile (நன்றி: C.R. Selvakumar)
தமிங்கிலம்=தமிழ்+ஆங்கிலம் (நன்றி: a recent article in Kalki 100th yr malar)
எண்மை= இரங்கத்தக்க நிலை; பரிதாப நிலை
போனகம்= உணவு


--செல்வா 19:49, 23 மார்ச் 2008 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:automobile&oldid=170773" இலிருந்து மீள்விக்கப்பட்டது