பேச்சு:offline

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

இணைய இணைப்பு இல்லாத நிலை என்பது பொருளாகத்தான் அமையும். கலைச்சொல்லாகாது. off line- அணை நிலை என்றும் on line- இணை நிலை என்றும் சொல்ல வேண்டும்.

கருத்தாளர் : இலக்குவனார் திருவள்ளுவன் சரியான கலைச்சொல்லாக்கம் தெரியாத நிலை அகற்றியமைக்கு நன்றி.

(~~~~நீங்கள் இட்டாலே உங்களதுபெயரும்.தேதியும்,நேரமும் தானாகப்பதிவு ஆகும்.)

--த*உழவன் 02:17, 1 ஜூலை 2010 (UTC)

பொருள் இணைப்பில் இல்லை என்பதுதான். I'm now offline என்பதை இயல்பாக இப்பொழுது நான் இணைப்பில் இல்லை என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும் (நேரடியான மொழிபெயர்ப்பு இல்லை). நான் அணைநிலையில் உள்ளேன் என்று கூறுதல் செயற்கையாகப் படுகின்றது. இணைப்பில் இலாமை என்று வேண்டுமானால் கூறலாம். அணைநிலை என்பது பொருத்தமான சொல்லாக இல்லை என்பது என் கருத்து. --செல்வா 19:37, 7 ஜூலை 2010 (UTC)

இணைப்பில் இலாமை என்று சொல்வது பொருளாக அமைகின்றது. சிலர் இணைப்பில் இயலாமை என்றுகூடப் பொருள் கொள்ளலாம். அணைநிலை என்பது சொல் வடிவாகின்றது. ஆப்லைனில் உள்ளேன் என்று சொல்லும் பொழுது இல்லாத செயற்கை அணைநிலையில் உள்ளேன் என்று சொல்லும் பொழுது வருவதன் காரணம் பயன்பாட்டுப் பழக்கம் இன்மையே. இணைப்பில் இல்லை என்று சொல்வதில் தவறு இல்லை. ஆனால், ஆப்லைன் என்று குறிப்பிடும் இடங்களில் அணைநிலை என்று சொல்வதுதான் கலைச்சொல் வளர்ச்சிக்கு உதவியாக அமையும்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:offline&oldid=728759" இருந்து மீள்விக்கப்பட்டது