பேச்சு:princess

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

மாணிக்கம், இளவரசி, அரச குமாரி ஆகிய இரு சொற்களுக்கும் இடையில் பொருள் வேறுபாடு இல்லை. அதே வேளை குமாரி என்பது வடமொழிச் சொல் என நினைக்கிறேன். அதை ஒரு synonym போல் தரவேண்டாமே? ஒத்த சொற்களை தரும் பொழுது அவை அனைத்தும் தமிழ்ச்சொற்களாக இருக்க வேண்டும் எனப் பரிந்துரைக்கிறேன். எம்மொழிச்சொல்லுக்கும் நல்ல தமிழ்ச்சொற்களை மட்டும் பொருளாக அறியத்தரும் தளமாக விக்சனரி இருக்க வேண்டும் என விரும்புகிறேன். பரிந்துரைக்கிறேன். அதே சமயம், அரச குமாரி என்ற தலைப்பில் ஒரு பக்கத்தை உருவாக்கி அங்கு இளவரசி என்ற பொருளையும், குமாரி என்ற சொல்லின் மூலத்தையும் விளக்கலாம். இதன் மூலம் எவை எவை தமிழ்ச்சொற்கள் என்று தெளியலாம். எந்த சொல்லையும் விளக்கி வைக்காமல் நல்ல தமிழ் விளக்கங்களையும் பெறலாம். இதே கருத்து animal பக்கத்தில் மிருகம் என்று நீங்கள் சேர்த்த பொருளுக்கும் பொருந்தும். அனைவருக்கும் (நான் உட்பட) எது பிற மொழி, எது தமிழ் மொழி என்று பிரித்துணர்வது கடினம் என்றாலும், தெளிவாக சுட்டிக்காட்டப்படும் இடங்களில் அவற்றை மாற்றலாம் என்று நினைக்கிறேன்--ரவி 20:49, 27 ஆகஸ்ட் 2006 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:princess&oldid=1993277" இலிருந்து மீள்விக்கப்பட்டது