பேச்சு:spelling bee

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

விவாதிக்கப்படும் சொற்களின் பட்டியல்[தொகு]

  • இதில் வரும் bee தேனீயாகக் காட்டப்படுவது வழக்கம். Bee என்பதற்கு, கூட்டம் (social gathering) என்றொரு பொருள் உண்டென ஆங்கில விக்கி கூறுகிறது. நெல் குத்துதல், துணி நெய்தல் போன்ற அலுவல்களைச் செய்யக் கூடிவருவோர் சமூகப் பாணியிலும் உறவாடுவதற்கு உதவும் கூட்டம் அது. காண்க: http://en.wikipedia.org/wiki/Spelling_bee

Spelling bee போட்டியின்போது எழுத்துக் கூட்டலும், கூட்டமும் இருப்பதால் இரண்டையும் உள்ளடக்கும் விதத்தில் எழுத்துக் கூட்டம் என்றே சொன்னால் எப்படி? :-) --George46 01:06, 31 மே 2010 (UTC)[பதிலளி]

  • நீங்கள் மேலே சொன்னதைச் சற்றே மாற்றி எழுத்துக்கூட்டி (போட்டி) என்று கொண்டு எழுத்துக்கூட்டி என்று சொன்னாலே போதும். bee என்று இகரத்தில் முடிவது போலவே எழுத்துக்கூட்டி எனலாம். மண் வெட்டுவதை மண்வெட்டி என்பது போல எழுத்துக்கூட்டுவோரை எழுத்துக்கூட்டி எனலாம். அவர்களுக்கான போட்டி என்பது வழக்கில் விளங்கும். --செல்வா 01:21, 31 மே 2010 (UTC)[பதிலளி]
வறுவேல், பழ.க நன்றி. எழுத்துப்பூண்பி (எழுத்துக் கோப்பவர்; பூண் என்னும் வினையடி) என்னும் பொருளில் பி என்றே முடியுமாறும் செய்யக்கூடும். மாற்றச்சொல்லவில்லை. ஒரு கருத்துக்காக கூறுகிறேன். எழுத்துப்பூண்பியருக்கான போட்டி, ஆகவே எழுத்துப்பூண்பி :) --செல்வா 13:31, 31 மே 2010 (UTC)[பதிலளி]
  • செல்வா, அதே அடிப்படையில் எழுத்துப்பூணி இன்னும் சிறப்பாக 'நச்' என இருக்குமோ? பூணி - பூ+தேனீ என்ற சொல்லொலிப்பு வருவது போல :) பழ.கந்தசாமி 17:08, 31 மே 2010 (UTC)[பதிலளி]
  • ஆம், எழுத்துப்பூணி என்பதும் அழகான சொல்லாகவே எனக்கும் படுகின்றது. பூண்பி விளையாட்டுக்கு அல்லது போட்டிக்குப் பாருங்கள் எத்தனை அரும்புகள் மொட்டு விட்டிருக்கின்றன என்று :) பூணி ஆட்டம், பூணிப் போட்டி (எழுத்து என்ப்பது சொல்லாமல் விளங்குவது) இப்படி பலவாறு சொல்லலாம். --செல்வா 17:27, 31 மே 2010 (UTC)[பதிலளி]
  • fling, one-night stand இவற்றுக்கு உகந்த தமிழ் மொழிபெயர்ப்புகள் பற்றிப் பேசலாமா? fling - ஒருநாள் உறவு, ஓரிரவு உறவு? அப்பக்கதின் பேச்சுப் பகுதியில் விவாதித்தல் நலம் பழ.கந்தசாமி 17:32, 3 ஜூன் 2010 (UTC)
  • கடந்த சில நாள்களாக இங்கே தீவிர கருத்துப்பகிர்வு நிகழ்கிறது. எங்கே தொடங்குவதென்றே தெரியவில்லை. இருந்தாலும், spelling beeயிலிருந்து தொடங்குகிறேன். இத்தேனீயின் இரீங்காரம் விரைவில் முடியாதோ! எழுத்துக்கூட்டியிலிருந்து பூட்டி, பூண்பி, பூணி...இன்னும் நீட்டிக்கொண்டே போகலாம். அவ்வளவு வளமை தமிழுக்கு இருக்கிறது!(George46 02:56, 1 ஜூன் 2010 (UTC))
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:spelling_bee&oldid=744433" இலிருந்து மீள்விக்கப்பட்டது