உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:volume

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

volume - கனவளவு என்று இருக்கிறது. கன அளவு என்பதை யார் இப்படி எழுதினார்கள் என்று தெரியவில்லை. இவ்விரண்டு சொல்லையும் சேர்த்து எழுத முடியுமா? கனம் + வளவு என்று தான் வருகிறது. கனஅளவு என்று தான் எழுதவேண்டும். --இராஜ்குமார் 20:04, 17 செப்டெம்பர் 2011 (UTC)Reply

ஒவ்வொரு பக்கத்தின் மேலும், வரலாற்றைக் காட்டவும் என்ற த த்தல் மூலம் நீங்கள் யார் உருவாக்கினார்கள் என்று காண இயலும்.எடுத்துக்காட்டாக, கனவளவு என்பதனை யார் உருவாக்கினார்கள் என்று காண்பதாகக் கொள்வோம். அதற்கு பின்வரும் படிகளை மேற்கொள்ளவும்.
  1. முதலில் சொல் பக்கத்திற்குச் செல்லவும்.
  2. மேலுள்ள வரலாற்றைக் காட்டவும் என்ற தத்தலைச் சொடுக்கவும்.
  3. முதலில் இருக்கும் தெரிவு செய்யப்பட்ட பதிப்புகளை ஒப்பிடவும் என்பதனைச் சொடுக்கவும்.
  4. பின்பு தோன்றும் பக்கத்தில், ← முந்தைய தொகுப்பு , அடுத்த வேறுபாடு → என்ற வசதிகள் மூலம் கண்டறியலாம். கா.சேது அவர்கள் உருவாக்கியுள்ளார் என்று நினைக்கிறேன்.

அவர் இலங்கையில் வாழும் மென்பொருள் அறிஞர். எ-கலப்பை உருவாக்கலில் முக்கிய பங்கு வகித்தவர். தமிழா குழுமத்தில் அவரை அடிக்கடி காண இயலும். பல தமிழ் சொற்களின் ஒலிப்பு அவர்களிடம் வேறுபாடாகவே இருக்கிறது.--05:41, 18 செப்டெம்பர் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

நீங்கள் கூறும் ஒலிப்பு முறை என்பது பேச்சு வழக்கை குறிக்கிறது என்று நினைக்கிறேன். பேச்சு வழக்கு ஒவ்வொரு இடத்திலும், வேறுபடும். ஆனால் இலக்கணம் அனைவருக்கும் ஒன்று தானே.

கனவளவு = கனம் + வளவு.
கனவளவு = கனவு + அளவு.
இவ்வாறு தான் பிரிக்க முடியும்.
கனம் + அளவு என்பது எப்படி கனவளவு என்று மாறக்கூடும்.--இராஜ்குமார் 07:18, 18 செப்டெம்பர் 2011 (UTC)Reply

கனஅளவு சரியென்றே நானும் கருதுகிறேன். //யார் இப்படி எழுதினார்கள் என்று தெரியவில்லை// என்று நீங்கள் இங்கு தெரிவித்தமையால், உங்களுக்கு சிலவிசயங்களை நான் அறிமுகப்படுத்தினேன்.அவ்வளவே. மாற்றிவிடுங்கள்.--17:55, 18 செப்டெம்பர் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..
இது பற்றி கூகிள் குழுமத்தில் கலந்துரையாடல் நடக்கிறது. பிறகு இதனை திருத்துவோம். நன்றி.--இராஜ்குமார் 07:13, 19 செப்டெம்பர் 2011 (UTC)Reply

கனவளவா, கன அளவா?

[தொகு]

இரு பயன்பாடுகளும் ஏற்கத்தக்கவையே. சென்ற மாதம் விக்கியில் "கோவிலா, கோயிலா?" என்றொரு உரையாடல் நடந்தது. அதில் கலந்துகொண்டு "உடம்படுமெய்" பற்றி நன்னூல் தருகின்ற விதியை எடுத்துக் கூறும் வாய்ப்பு ஏற்பட்டது. காண்க:கோவிலா, கோயிலா?

உடம்படுமெய் என்பது "நிலைமொழி ஈற்றிலும் வருமொழி முதலிலும் உள்ள உயிர்/உயிர்மெய் எழுத்துகளை இசைவாக ஒன்றுசேர்க்க வருகின்ற மெய்யெழுத்தைக் குறிக்கும்." இத்தகைய இரு மெய்யெழுத்துகள் "வ்", "ய்" என்பனவாகும்.

உடம்படுமெய் பற்றிய இலக்கண விதிகளையும் விளக்கங்களையும், தொல்காப்பியர் கால வழக்கு, நன்னூல் வழக்கு, தற்கால வழக்கு போன்றவற்றையும் காண்க:உடம்படுமெய் - விரிவான விளக்கம்.

கனம்>கன+அளவு = கனவளவு என்னும்போது அங்கே இலக்கணப் பிழை இல்லை. "கன அளவு" என்று பிரித்து எழுதினால் இன்று எளிதாகப் பொருள் புரிந்துகொள்ளலாம் என்னும் ஒரே காரணத்திற்காக "கனவளவு" தமிழ் வழக்கு அல்ல என்பது முறையன்று. இரு சொற்களுக்கும் இடையே வருகின்ற "வ்" என்னும் மெய் இலக்கண முறைப்படி சரியானதே.

(ஒப்பிடுக: புறம்>புற+அமைப்பு = புறவமைப்பு; குடம்>குட+ஓலை = குடவோலை; அகம்>அக+அன்பு = அகவன்பு).--பவுல்-Paul 14:29, 21 செப்டெம்பர் 2011 (UTC)Reply

நன்றி பவுல். நான் அதனை அன்றே அறிந்தேன். தவறு எண்ணுடையது தான். கா.சேது அவர்களும் இதனை கூறினார். 'வ்' மிகும் இவ்விலக்கணம் நானும் படித்திருக்கிறேன். --இராஜ்குமார் 18:26, 21 செப்டெம்பர் 2011 (UTC)Reply

இலங்கையில் கனவளவு என்ற சொல்லே பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.--58.168.2.200 21:06, 21 செப்டெம்பர் 2011 (UTC)Reply
ஆம். இலங்கையில் பாடசாலைகள் முதல் பல்கலைக்கழகங்கள் வரையில் அனைத்து பாடநூல்களிலும் 'கனவளவு' என்பது 'Volume' ஐக் குறிக்க பயன்படுத்தப்படுகின்றது. --124.43.200.163 08:55, 28 செப்டெம்பர் 2011 (UTC)Reply
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:volume&oldid=1012500" இலிருந்து மீள்விக்கப்பட்டது