உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:warlock

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

த*உழவன், நோட்ராடாமசு (Nostradamus) ஒரு மந்திரவாதியா? இப்பக்கத்தில் சேர்த்துள்ள படம் பொருத்தமானதா? அவர் ஒரு மருந்து கலப்பவரும், எதிர்கால நிகழ்வுகள் சிலவற்றை உய்த்து முற்கூறியவர் என்பார்கள் அல்லவா? அவர் மந்திரவாதி என்றும் அறியப்படுகின்றாரா? மருந்து கலந்துருவாக்குவோர் என்பதாலா? நோட்ராடாமசு ஒரு வார்லாக் என நான் கேள்விப்பட்டதில்லை. --செல்வா 12:50, 4 ஜூன் 2010 (UTC)

இப்படம் சரியானதல்ல என்பது என் கருத்து. இப்படியான சாய்வுகள் தருவது சரியல்ல, த*உழவன். wizard என்பது ஒரு வகையான நீட்சிப்பொருள் (இங்கு wizard என்பது ஒரு குறிப்பிட்ட பொருளில் வருவது, அதாவது magician என்னும் பொருளில்), அப்படியே நீங்கள் அதே பொருள் எனக்கொண்டாலும், அதற்கு நோட்ராடாமசு ஏதும் தனியுயர்வான எடுத்துக்காட்டானவர் அல்லர். ஆக்ஃசுபோர்டு அகரமுதலி, நான்காவது பொருளாக (முதல் 3 பொருளும் வழக்கொழிந்தவை), "One in league with the Devil and so possessing occult and evil powers; a sorcerer, wizard (sometimes partly imagined as inhuman or demonic, and so approaching sense 2 or 3); the male equivalent of witch. Sc. and north. dial." (source OED). என்கிறது. மேலும் "Frequently used by Scott, whence it has obtained some general literary currency. On the form warlock, specialized for this sense, see the etymology. " என்கிறது. அடுத்த துணைப் பொருளாக (b) Sc. In weaker sense, a magician, conjurer. என்கிறது. மிகப்புகழ்பெற்ற அங்கேரிய கண்கட்டுவித்தையர் (magician) ஃகூடினி (Houdini) வேறு வகையான magician. இவரைக்கூட warlock (வார்லாக்) எனல் சரியாக அமையாது. மசீ'சியன் (magician, கண்கட்டியருக்கு)க் கட்டாயம் ஃகூடினியை ஓர் எடுத்துக்காட்டாகக் காட்டலாம் (ஏனெனில் அவர் புகழ் அப்படிப்பட்டது, அது தொடர்பானது). ஆனால் வார்லாக் என்பதன் அடிப்பொருள் (கெட்ட கோணங்களில்) sorcerer என்பதை ஒத்தது. படத்தை நீக்குவது நல்லதென்பது என் கருத்து.--செல்வா 14:23, 4 ஜூன் 2010 (UTC)

  • இப்படம் warlock என்பதன் பொருளை உணர்த்தவில்லை என்பதே என் கருத்தும், நன்றி. பழ.கந்தசாமி 14:57, 4 ஜூன் 2010 (UTC)

படத்தை நீக்கி விட்டேன். கவனக்குறைவால் விடுபட்டு போனது. இது போல படங்களிருப்பின் நீக்கம் செய்ய வேண்டுகிறேன். நாம் அனைவருக்கும் நேரக்கட்டுபாடு இருப்பதால் தவற்றை திருத்த தயக்கம் வேண்டாம்.--த*உழவன் 06:39, 23 ஜூலை 2010 (UTC)

படத்தை நீகியதற்கு நன்றி. நீங்கள் மேலே இன்னும் கருத்தாடிக்கொண்டிருந்ததால் நீக்கவில்லை. கூடிய அளவு இணக்க முடிவை விரும்பியதால், பொறுத்திருக்க நேர்ந்தது. ஆனால், இதனால் பார்ப்போருக்கு நேரும் தகவல்பிழைகளைக் கருத்தில் கொண்டால் உடனே நீக்கியிருக்க வேண்டும். நீங்கள் நாள்தோறும் நீங்கள் பார்ப்பதாலும், உங்களுக்கு வருத்தம் வரக்கூடாது என்னும் நினைப்பிலும் செய்யவில்லை. அப்படி நீக்கிவிட்டால், தன்னிச்சையாக செய்த ஒன்றாக பிறழ உணர வாய்ப்புள்ளது. --செல்வா 14:41, 23 ஜூலை 2010 (UTC)
  • இனி உடன் நீக்கினால் கருத்தாடலும் நிற்கும். ஏனெனில், அதற்கானக் காரணங்களை, நீங்கள் நிச்சயமாக உரையாடல் பக்கத்தில் தெரிவிப்பீர்கள். நீங்களும் மறவாமல் செயல்படலாம். தொடர்ந்து கவனிக்கும் நேரமும் மீதமாகும். இனி உடன் நீக்க வேண்டுகிறேன். இனி படங்களை அதிகமாக தானியங்கி முறையில் இடுவேன். அப்போது ஒரு முறைக்கு இருமுறை சரிபார்த்தே இடுவேன். எனினும், நூற்றுக்கணக்கானப் படங்களை கையாளும் போது, தவறுகள் வரவும் வாய்ப்புண்டு. நன்றி. வணக்கம்.--த*உழவன் 02:06, 24 ஜூலை 2010 (UTC)

Start a discussion about warlock

Start a discussion
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:warlock&oldid=763521" இலிருந்து மீள்விக்கப்பட்டது