பொதி
Appearance
பொதி (பெ)
ஒலிப்பு
|
---|
பொருள்
- நிறைவு
- மூட்டை
- பல பண்டம்
- நிதி
- சொற்பயன்
- ஒருவகை நிறையளவு
- பிணிப்பு
- கட்டுச்சாதம்
- தொகுதி
- அரும்பு
- கொத்து
- முளை
- உடல்
- தவிடு
- கரிகாடு (மரங்கள் கரிந்து போன காடு)
- காய்ந்த நன்செய்
- மூங்கில் முதலியவற்றின் பட்டை
- குடையோலை
- பசு முதலியவற்றின் மடி
- பருமன்
- ஓலைக்குடை
- 3 அல்லது 4 கன அடி யுள்ள நீர்மப்பொரு ளளவுவகை
- 2, 640 சதுர கெசம் கொண்ட நிலவளவுவகை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- fullness, perfection
- pack, bundle; load, as for a beast; parcel tied in a cloth
- miscellaneous goods
- treasure
- meaning of a word
- pack-load, a measure of weight varying with the locality
- tie, fastening
- boiled rice tied up for a journey; viaticum
- collection
- flower bud
- cluster
- tender shoots, as of paddy
- body
- bran
- burnt jungle
- dry state of wet land
- bark, as of bamboo
- Ola basket used as a cup in eating and drinking
- udder
- stoutness
- umbrella made of palm leaves
- a liquid measure of 3 or 4 c. ft
- a superficial measure of land, 2,640 sq. yards
விளக்கம்
- காடு என்பதன் விளக்கம்: பருத்துயர்ந்த மரங்கள் நெருங்கிய காட்டை வல்லை என்றும், சிறுமரங்கள் மிடைந்த காட்டை இறும்பு, குறுங்காடு என்றும், சிறு தூறுகள் பம்பின காட்டை அரில், அறல், பதுக்கை என்றும், மிக முதிர்ந்த முற்றிப்போன மரங்களையுடைய காட்டை முதை என்றும், மரங்கள் கரிந்து போன காட்டைப் பொச்சை, சுரம், பொதி என்றும், அரசனது காவலில் உள்ள காட்டைக் கணையம், மிளை, அரண் என்றும் பண்டுதொட்டுத் தமிழ் மக்கள் வழங்கி வந்திருக்கின்றனர் (பக் 44) இது 1934 இல் வெளிவந்தது. [இரா. இளங்குமரன், மறைமலையடிகள், பக்கம் 112, சாகித்திய அக்காதெமியின் இந்திய இலக்கியச் சிற்பிகள் நூல் வரிசை, 1995]
- 2010-11-ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த பருத்தி உற்பத்தி 333 லட்சம் பொதிகள் (ஒரு பொதி 170 கிலோகிராம்) என்றால், நிகழ் நிதியாண்டில் 345 லட்சம் பொதிகள் (தலையங்கம்: கையும் காலும்தான் மிச்சம்!, தினமணி தலையங்கம், 09 மார்ச்சு 2012)
பயன்பாடு
- ஆள் பொதியாயிருக்கிறான்.
- துள்ளுகிற மாடு பொதி சுமக்காது
(இலக்கியப் பயன்பாடு)
- பொதித்தே னுகர்ந்தகலும் (தஞ்சைவா. 290)
- கண்ணெழுத்துப் படுத்த . . . பொதி (சிலப். 5, 112)
- மலர்ப்பொதி யவிழ்த்து (காசிக. நாரத. 5)
- பெய்கணைப் பொதிகளாலே வளர்ந்தது பிறந்தகோபம் (கம்பரா. நாகபா. 114)
- கமலப் பொதியினை நகுவன புணர்முலை (கம்பரா. நாட். 44)
- அம்பொதித்தோரை (மலைபடு. 121)
- பசும்பொதித் தேறல் (மலைபடு. 463)
- பொதியே சுமந்துழல்வீர் (தேவா. 1154, 9)
- பைங்கழை பொதிகளைந் தன்ன (புறநா. 253)
சொல்வளம்
[தொகு]- பொதிந்த - loaded (e.g. பொருள் பொதிந்த - laden with meaning)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +