போதாத காலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

போதாத காலம், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. சாதகமில்லாத காலம்.

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. unfavourable time.

விளக்கம்[தொகு]

  • பேச்சு வழக்கில் 'போராத காலம்": ஒருவருக்கு தொடர்ந்து அவர் செய்யும் காரியங்கள் சரியாக அமையாமல் தோல்வியைத் தழுவிக்கொண்டிருந்தாலோ அல்லது மேன்மேலும் விரும்பத்தாகாத நிகழ்வுகள் அவர் வாழ்வில் நடந்தாலோ அவை நடக்கும் அந்த காலம் அவருக்கு போராத காலமாகும்.

பயன்பாடு[தொகு]

  • கமலாவுக்கு என்ன ஆச்சு தெரியுமா? ஆறு மாதமாக அவள் அப்பா உடம்பு சரியில்லாமல் கிடந்து எழுந்தார். இப்போ என்னடா என்றால் அவள் மகன் அடி பட்டு கிடக்கிறானாம்... கேட்ட பண உதவியும் அவளுக்கு கிடைக்கவில்லை... எல்லாம் அவளுடைய போராத காலம்!
"https://ta.wiktionary.org/w/index.php?title=போதாத_காலம்&oldid=1222267" இலிருந்து மீள்விக்கப்பட்டது