மண்டை மசாலா
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மண்டை மசாலா, பெயர்ச்சொல்.
- (மண்டை+ மசாலா)
விளக்கம்
[தொகு]- சென்னை வட்டாரத்திலுள்ள ஒருபேச்சு வழக்கு...அறிவு, புத்திக்கூர்மை, தெளிவான சிந்தனை, சமயோசித புத்தி, சரியான யோசனை, சரியாக முடிவெடுக்கும் திறன் ஆகிய பண்புகளைக் குறிக்கும் சொல்...இவை அனைத்தும் மண்டைக்குள் இருக்கும் மூளையின்பாற்பட்ட இயல்புகளாதலால் மண்டை மாசாலா என்று சொல்லப்படுகிறது...மசாலா என்றாலே ஒன்றுக்கும் மேற்பட்ட விடயங்கள் கலந்தவை என்றுப் பொருள்..மண்டையிலே மசாலா என்னும் சொற்தொடராகவும் பயனாகிறது
பயன்பாடு
[தொகு]- அந்த சுப்பனிடம் போய் இந்த விடயங்களையெல்லாம் சொல்கிறாயே!...அவனுக்கு என்னப் புரியும்?...மண்டையிலே மசாலா இல்லாதவன்...
- சுந்தரை நம்பி இந்தக் காரியத்தை அவனிடம் ஒப்படைக்கலாம்!...மிகச்சரியாகச் செய்து முடிப்பன்...அவனுக்கு மண்டை மசாலா...நிறையவே உண்டு...
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- intelligence,wisdom, right thinking, taking right decision etc which are related to the function of human brain.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +