உள்ளடக்கத்துக்குச் செல்

மன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


மன் (இ)

  1. கழிவு
  2. ஆக்கம்
  3. ஒழியிசை
விளக்கம்
தொல்காப்பியம் இடையியல் நூற்பா 3
  1. கழிந்த ஒன்று
  2. ஆக்கம் தரும் செயல்
  3. ஒழித்தல் பொருள்.
பயன்பாடு
  1. சிறிய கட் பெறினே எமக்கு ஈயும் மன்னே (புறநானூறு 235) (மன் - கழிந்துபோன ஒன்று)
  2. புதுமலர் கஞல இன்று பெயரின், அதுமன் எம் பரிசில் ஆவியர் கோவே (புறநானூறு 147) (மன் - ஆக்கம்)
  3. கூரியதோர் வாள்மன் (வாள் ஒழித்துக்கட்டும் என்றது)
  1. அதியமான் இறந்தபோது ஔவையார் பாடிய கையறுநிலை.
  2. பேகன் தன் மனைவி கண்ணகிக்குப் பூச் சூட்டினால் அது புலவர் பெருங்குன்றூர் கிழாருக்கு ஆக்கமாம்.
  3. வாள் ஒழித்துக்கட்டிவிடுமாம்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=மன்&oldid=1995775" இலிருந்து மீள்விக்கப்பட்டது