மழு
Appearance
பொருள்
மழு(பெ)
- கோடரி
- பரசாயுதம்
- மாமழுச் சூலம் பாடி (திருவாச. 9, 17).
- பழுக்கக் காய்ச்சிய இரும்பு
- ஆஸ்ரித விஷயத்தில் மழுவேந்திக் கொடுத்துக் காரியஞ்செய்யுமவன் (ஈடு. 2, 6, 9).
- கடல்
- மழுங்கிய மழுமட்டை
- அதிகமான
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- முருகப் பெருமான், அன்னையிடம் வேல் பெற்றுக்கொண்டு மட்டும் போருக்குச் செல்லவில்லை. இன்னும் பல சக்தி வாய்ந்த ஆயுதங்களையும் பெற்றார். அதில் ஒன்று மழு என்ற ஆயுதம். இந்த ஆயுதத்தால் அசுரனின் தலையைக் கொய்து, அதை எடுத்து வரும் வழியில், மாலை வெகு நேரம் ஆனதால், ஓர் இடத்தில் தங்க நேர்ந்தது. அசுரனை அழிக்க அன்னையிடம் மழு என்ற ஆயுதத்தைக் கேட்டுப் பெற்றதை நினைவுகூரும் வகையில் அவ்விடம் "கொடுமழு ஊர்" என்று அழைக்கப்பட்டது(முழங்கால் வலி நீக்கும் முருகன், தினமணி, வெள்ளிமணி, 28 அக் 2011அ )
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) +DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
கோடாலி, பரசாயுதம், மழுமட்டை, மழுங்கிய, முழு