முடங்குதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • முடங்குதல், பெயர்ச்சொல்.
  1. சுருங்குதல்
    (எ. கா.) இடங்குறை வாயிலின் முடங்கி யிருந்துழி (பதினொ. திருவிடை. மும். 22)
  2. கைகால் வழங்காமற்போதல்
    (எ. கா.) கைகால் முடங்கு பொறியிலி (பிரபுலிங். துதி. 1)
  3. தடைப்படுதல்
    (எ. கா.) காரியம் முடங்கிவிட்டது
  4. வளைதல்
    (எ. கா.) அடங்கினன் முடங்கியலம் வந்து (உத்திரரா. வரையெடுத்த. 72)
  5. கெடுதல்
    (எ. கா.) சிறுமை பொருந்திப் பெருமை முடங்கி (திருப்பு. 372)
  6. தங்குதல்
    (எ. கா.) அறுகாற் பறவை முடங்கிய செஞ்சடை முக்கணனர்க்கு (பதினொ. பொன்வண். 64)
  7. படுத்துக்கொள்ளுதல்
    (எ. கா.) பசியட முடங்கிய பைங்கட் செந்நாய் (நற். 103)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To contract To become lame or maimed To be hindered, frustrated To bend To be spoiled To abide, remain, stay To lie down



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முடங்குதல்&oldid=1269010" இருந்து மீள்விக்கப்பட்டது