உள்ளடக்கத்துக்குச் செல்

முரிதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • முரிதல், பெயர்ச்சொல்.
  1. ஒடிதல் (சூடாமணி நிகண்டு)
  2. கெடுதல்
    (எ. கா.) இடைக்கண் முரிந்தார் பலர் (குறள். 473)
  3. சிதறுதல்
    (எ. கா.) பஞ்சினம் புகைமுரிந் தெழுந்தென விண்ணத்தலமர (கல்லா. 7)
  4. தவறுதல்
    (எ. கா.) முரியுங்காலைத் தெரிய மற்றதிற் றட்டினள் ... எழுப்பி (பெருங். வத்தவ. 12, 99)
  5. தோல்வியுறுதல்
    (எ. கா.) முற்றிய வமரர்சேனை முரிந்தன (விநாயகபு. 34, 15)
  6. நீங்குதல் (சீவக. 372.)
  7. நிலை கெடுதல்
    (எ. கா.) இடை முரிந்து வேந்தனும் வேந்து கெடும் (குறள். 899)
  8. குணங் கெடுதல்
    (எ. கா.) ஒழுகுபால் கதிர்வெயிற் படமுரிந்து (திருச்செந்தூர். பிள்ளைத் செங்கீரை. 1)
  9. வளைதல்
    (எ. கா.) முரிந்து கடைநெரிய வரிந்த சிலைப்புருவமும் (மணி. 18, 161)
  10. தளர்தல்
    (எ. கா.) முரிந்தநடை மடந்தையர்த முழந்கொலியும் வழங்கொலியும் (திருவிசைப். கருவூ. 5, 10)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To break off, snap off To perish; to be ruined To be scattered To go wrong To be defeated To separate, leave To lose one's position To be spoiled To bend To lack in strength; to be gentle, as in gait



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முரிதல்&oldid=1269372" இலிருந்து மீள்விக்கப்பட்டது