முறைவாசல்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
முறைவாசல், .
பொருள்
[தொகு]- வீட்டு வேலைக்குப் போகும் வரிசைக்கிரமம்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- time & priority schedule to attend domestic works in many homes
விளக்கம்
[தொகு]- சென்னை வழக்கு... பேச்சு வழக்கில் 'மொறவாசலு'... முறை என்றால் வரிசைக்கிரமம் என்னும் பொருளில் பயன்படுத்தப்படுவது...வாசல் என்றால் வாசல் உடையதான வீடு என்னும் பொருளில் பயன்படுத்தப்படுகிறது...வீட்டைத் துடைப்பது, கழுவுவது, துணித் தோய்ப்பது, பாத்திரங்களைத் தேய்ப்பது போன்ற வீட்டு வேலைகளைச் செய்யும் பணிப்பெண்கள் பயன்படுத்தும் சொல்... ஒரு வீட்டு வேலைகளை மாத்திரம் செய்தால், வரும் சம்பளம் குடும்பம் நடத்தப் போதாது... ஆகவே இவர்கள் பல வீடுகளில் வீட்டு வேலைகளைச் செய்ய ஒப்புக்கொள்ளுவார்கள்... பிறகு அந்தந்த வீடுகளின் தேவைக்கேற்ப ஒவ்வொருநாள் காலையிலும் வரிசையாக எந்தெந்த வீடுகளுக்கு எவ்வெப்போது 'முதலில், அதற்கடுத்து' என்ற முறையில் வேலைக்குச் செல்லவேண்டும் என ஒரு வரிசைக்கிரமம் வைத்துக்கொண்டு அதன்படி செய்வார்கள். இதையே 'முறைவாசல்' என்பர்.
பயன்பாடு
[தொகு]- ஏய், இன்னுமா தூக்கம், முறைவாசலுக்கு போகவேண்டாமா? எழுந்திரு.