ரங்கோலி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

ரங்கோலி, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. பலநிறங்களில் தரையில் வரையப்படும் சித்திரங்கள்/கோலங்கள்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. decorative drawings on floor using coloured powders.

விளக்கம்[தொகு]

  • திசைச்சொல்--இந்தியில். 'ரங்க்3' என்றால் நிறம் என்று பொருள்...பண்டிகை/திருவிழா/குடும்ப விசேட நாட்கள் போன்ற காலங்களில் பலவிதமான நிறங்களுடையப் பொடி/தூள்களைக்கொண்டு தரையில் வரையப்படும் வகைவகையானப் பூக்கள்,பறவைகள்,விலங்குகள் முதலியவற்றின் சித்திரங்கள்/கோலங்கள்...இது அடிப்படையில் ஒரு வட இந்திய வழக்கமாகும்...தற்போது இந்தியா முழுவதும் பரவிவிட்ட ஒரு கலை...தமிழக பொங்கல் பண்டிகையிலும், சம்பிரதாயமான மாக்கோலங்கள், இழைக்கோலங்களை பெருமளவு புறந்தள்ளிவிட்டு, இணைந்துவிட்டது... இந்தக்கலையில்...போட்டிகளும் நடைபெறுவதுண்டு...

பயன்பாடு[தொகு]

  • இந்த ஆண்டு நம்மூரில் ரங்கோலிப் போட்டி நடத்தப் போகிறார்களாம்...வேண்டியப் பொருட்களையெல்லாம் இப்போதே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்...பிறகு கிடைக்காமல் போகலாம்...நாம்தான் இந்த ரங்கோலிப் போட்டியில் வெல்லப் போகிறோம் தெரிகிறதா?

பலவித ரங்கோலிக் கோலங்கள்:-

"https://ta.wiktionary.org/w/index.php?title=ரங்கோலி&oldid=1284444" இலிருந்து மீள்விக்கப்பட்டது